சஞ்சய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 42:
சஞ்ஜய் தனது அன்னையிடம் கொண்டிருந்த செல்வாக்கு, நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தியதை உறுதி செய்தது என்று தோன்றுகிறது. நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது (1975-1977) சஞ்ஜய் தனது அதிகார ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார் என்பது தெளிவு. இவர் எந்தப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எந்த ஒரு அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை. ஆயினும், இவர் தான் புதிதாகப் பெற்ற செல்வாக்கை அமைச்சர்களிடமும், உயர்மட்ட அரசு அலுவலர்களிடமும் காவல் துறை அலுவலர்களிடமும் பயன்படுத்தத் துவங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைச்சர்களும் அலுவலர்களும் பதவியைத் துறந்தபோது, அவர்கள் பணிக்குப் புதியவர்களை சஞ்ஜய் நியமித்ததாகக் கூறப்படுகிறது.
 
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளில் சஞ்ஜய் தலையிட்டு அமைச்சருக்கு ஆணைகள் வழங்கியபோது, பின்னாளில் பிரதமரான [[ஐ. கே. குஜரால்|இந்தர் குமார் குஜ்ரால்]] தனது அமைச்சர் பணியைத் துறந்தது பிரபலமான எடுத்துக்காட்டாகும். குஜ்ரால் சினத்துடன் சஞ்ஜய்யை எதிர்த்ததோடு, தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடமிருந்து ஆணைகளைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது.
 
===ஜமா மஸ்ஜித் சேரி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விவகாரங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சஞ்சய்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது