விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
→‎ரகரமும் றகரமும்: நாம் நினைப்பதையும் பார்க்க சற்று பலக்கிய பிரச்சினையே.
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎இதுதான் பிரச்சினை: நடைக்கையேட்டில் இவ்வேறுபாட்டை விளக்குதல் ஒரு இடைத்தீர்வாக இருக்கலாம்
வரிசை 162:
 
ஆனால் விக்கிபீடியாவில் பொதுவான வழக்கமான ஆகஸ்டு என்பதையே உபயோகிக்கிறேன். நான் மாதங்களுக்கான வார்ப்புருக்களை உருவாக்க சிவகுமாரிடம் கேட்கக் காரணம் உங்களது உச்சரிப்பைப் பொதுவானதாகப் பின்பற்ற விரும்பியமையே. நான் முதல் ரெஸ்ற் போட்டி பற்றிய கட்டுரையை [[முதல் டெஸ்ட் போட்டி]] என்றே தொடங்கினேன் என்பதை இங்கே சுட்டிக் காட்டுகிறேன். (இன்னும் பல உதாரணங்கள் உள்ளன)
 
===என் கருத்து===
இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் '''மொழிக்கு எழுத்து வழக்கு பொதுவாகவே இருக்க வேண்டும்''' என நான் நம்புகிறேன். நாம் எப்படி உச்சரித்தாலும் தமிழ்ச் சொற்களைப் பொதுவான முறையிலேயே எழுதுகிறோம். உச்சரிப்புத்தான் மாறுபடுகிறது. அதனைக் கொச்சை எனபது நியாயமல்ல. உச்சரிப்பு வேறுபாட்டால் மொழிக்கு ஆபத்தில்லை. (அதாவது உச்சரிப்பு மாறுபட்டாலும் எழுதுவது பொதுவானது என்பதால் விக்கிபீடியாவிலும் எந்த சிக்கலும் இல்லை)
 
ஆனால் இந்த உச்சரிப்பு வேறுபாடு காரணமாக நாம் ஆங்கிலச் சொற்களை ஒலிபெயர்க்கும்போதுதான் சிக்கல்கள் வருகின்றன. அதனால் மிக அதிகமான தமிழர் உபயோகிக்கும் வழக்கைப் போலவே பயன்படுத்துவதே விக்கிபீடியா போன்ற இடங்களில் நன்றென நான் நினைக்கிறேன். (அதனாலேயே ஆகஸ்டு என்றும் டெஸ்ட் என்றும் கட்டுரைகளைத் தொடங்கினேன்) ஆனால் toranto டொரான்டோ என்று பெயர் பெற வாய்ப்பில்லை. ஏனெனில் அங்குள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் ரொறான்ரோ என்றே எழுதுவார்கள். ஆதலால் அதுதான் பொதுவழக்காகும்.
-- [[பயனர்:கோபி|கோபி]] 13:21, 8 ஆகஸ்ட் 2006 (UTC)
 
கோபி, சில விக்கிபீடியா கட்டுரைகளில் டெஸ்ட் என்றும் சிலவற்றில் ரெஸ்ற் என்றும் காணக்கண்டு தான் இந்த விடயத்தை எழுப்ப நேர்ந்தது. இன்னும் சில கட்டுரைகளில் சென்ரி மீற்றர் போன்ற வழக்குகளையும் காண நேர்ந்தது. எதுவாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் சீராக இருக்க வேண்டும். அதுவே பெரும்பாலோர் பயன்படுத்தும் வழக்காக இருக்கையில் சொல்ல வந்த விடயத்தை தெரிவிப்பது எளிதாகிறது. இவ்விஷயத்தில் நடைக்கையேட்டில் எதைப் பரிந்துரைப்பது என்பது கொஞ்சம் தலை சுற்றும் விஷயமாகத்தான் இருக்கிறது :(--[[பயனர்:Ravidreams|ரவி]] 13:48, 8 ஆகஸ்ட் 2006 (UTC)
 
== இதுதான் பிரச்சினை ==
வரி 172 ⟶ 180:
சுந்தர் சுட்டியபடி, இலக்கணம் என்பது "பரிந்துரை இலக்கணமா" அல்லது "பயன்படு மொழியின் விபரிப்பா" என்ற கேள்வி எழுகின்றது. செல்வா சுட்டியபடி என்ன எல்லாம் பயன்படுகின்றதோ அதை இலக்கணம் ஆக்குவது தவறு. எழுத்து தமிழில் ஒரே முறையை பின்பற்றுவது அவசியம். அப்படி இல்லை என்றால் தமிழ் சிதறிவிடும். ஆனால் இந்த பிரச்சினையை "யாழ்ப்பாண மக்கள்" எளிதாக எடுத்துகொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். காரணம், இதை அவர்கள் அடையாள பிரச்சினையாக பார்க்க முனைவார்கள். "யாழ்ப்பாண தமிழ்" திரைப்படங்களில் கொச்சைப்படுத்தப்படுவது தொடர்பாக பல குமுறல்கள் ஏற்கனவே உண்டு. மேலும், தமிழை தாமே திறமாக உச்சரிப்பதாக (வானொலியில்) ஒரு கருத்தும் உண்டு (தமிங்கிலிஸ் உடன் ஒப்பிடுகையில் அப்படியிருக்கலாம்). எனவே இது நாம் நினைப்பதையும் பார்க்க சற்று பலக்கிய பிரச்சினையே.
 
என்னை பொறுத்தவரையில் இவ்வேறுபாடுகளை சரியாக புரிந்துகொள்வதும், அதற்குரிய தீர்வுகளை நடு நிலைமையோடு தெளிவாக முன்வைப்பதும் நாம் இப்போது செய்ய கூடிய செயல்பாடுகள். நடைக்கையேட்டில் இவ்வேறுபாட்டை விளக்குதல் ஒரு இடைத்தீர்வாக இருக்கலாம்.
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] 15:10, 8 ஆகஸ்ட் 2006 (UTC)
 
===என் கருத்து===
இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் '''மொழிக்கு எழுத்து வழக்கு பொதுவாகவே இருக்க வேண்டும்''' என நான் நம்புகிறேன். நாம் எப்படி உச்சரித்தாலும் தமிழ்ச் சொற்களைப் பொதுவான முறையிலேயே எழுதுகிறோம். உச்சரிப்புத்தான் மாறுபடுகிறது. அதனைக் கொச்சை எனபது நியாயமல்ல. உச்சரிப்பு வேறுபாட்டால் மொழிக்கு ஆபத்தில்லை. (அதாவது உச்சரிப்பு மாறுபட்டாலும் எழுதுவது பொதுவானது என்பதால் விக்கிபீடியாவிலும் எந்த சிக்கலும் இல்லை)
 
ஆனால் இந்த உச்சரிப்பு வேறுபாடு காரணமாக நாம் ஆங்கிலச் சொற்களை ஒலிபெயர்க்கும்போதுதான் சிக்கல்கள் வருகின்றன. அதனால் மிக அதிகமான தமிழர் உபயோகிக்கும் வழக்கைப் போலவே பயன்படுத்துவதே விக்கிபீடியா போன்ற இடங்களில் நன்றென நான் நினைக்கிறேன். (அதனாலேயே ஆகஸ்டு என்றும் டெஸ்ட் என்றும் கட்டுரைகளைத் தொடங்கினேன்) ஆனால் toranto டொரான்டோ என்று பெயர் பெற வாய்ப்பில்லை. ஏனெனில் அங்குள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் ரொறான்ரோ என்றே எழுதுவார்கள். ஆதலால் அதுதான் பொதுவழக்காகும்.
-- [[பயனர்:கோபி|கோபி]] 13:21, 8 ஆகஸ்ட் 2006 (UTC)
 
கோபி, சில விக்கிபீடியா கட்டுரைகளில் டெஸ்ட் என்றும் சிலவற்றில் ரெஸ்ற் என்றும் காணக்கண்டு தான் இந்த விடயத்தை எழுப்ப நேர்ந்தது. இன்னும் சில கட்டுரைகளில் சென்ரி மீற்றர் போன்ற வழக்குகளையும் காண நேர்ந்தது. எதுவாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் சீராக இருக்க வேண்டும். அதுவே பெரும்பாலோர் பயன்படுத்தும் வழக்காக இருக்கையில் சொல்ல வந்த விடயத்தை தெரிவிப்பது எளிதாகிறது. இவ்விஷயத்தில் நடைக்கையேட்டில் எதைப் பரிந்துரைப்பது என்பது கொஞ்சம் தலை சுற்றும் விஷயமாகத்தான் இருக்கிறது :(--[[பயனர்:Ravidreams|ரவி]] 13:48, 8 ஆகஸ்ட் 2006 (UTC)
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".