கோப்புப் பரிமாற்ற நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: விக்கி கவினுரை
வரிசை 1:
'''கோப்பு பரிமாற்ற நெறிமுறை''' ('''FTP''' ) என்பது டிசிபி/ஐபி அடிப்படையிலான [[இணையம்]] போன்ற வலையமைப்பில் கோப்புகளைத் திறமையாக கையாளவும், பரிமாற்றம் செய்யவும் பயன்படுத்தப்படும் தரமுறைப்படுத்தப்பட்ட வலையமைப்பு நெறிமுறையாகும். கிளையன் வழங்கன் (Client Server) வடிவமைப்பின் மீது கட்டப்பட்டிருக்கும் எஃப்டிபி, கிளையன் மற்றும் வழங்கன் பயன்பாடுகளுக்கு இடையே பிரத்யேக கட்டுப்பாடுகளையும், தரவு இணைப்புகளையும் பயன்படுத்துகிறது. பயன்பாடுகள் உண்மையிலேயே தரமுறைப்படுத்தப்பட்ட கட்டளை தொடரமைப்புடன் (standard command syntax), ஓர் எளிய கட்டளை-வரி கருவிகளாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைத்து இயங்குதளங்களுக்கும் ஏற்றவாறு பயனர் வரைபட இடைமுகங்கள் (graphical user interfaces) அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. உள்நிரல் செயல்பாடுகளுக்காக தானாகவே கோப்புகளை மாற்ற, பெரும்பாலும் எஃப்டிபி ஒரு பயன்பாட்டு உட்கூறாகவே (component) பயன்படுத்தப்படுகின்றன. பதிவு செய்யப்பட்ட கடவுச்சொல் உடைய ஒரு பயனராகவோ அல்லது பதிவுசெய்யப்படாத ஒரு பயனராகவோ இருந்து கோப்பு பரிமாற்ற நெறிமுறையைப் பயன்படுத்த முடியும். சாரமற்ற கோப்பு பரிமாற்ற நெறிமுறையும் (Trival File Transfer Protocol-TFTP) இதை போன்றதே. ஆனால் எளிமையாக்கப்பட்ட இது, பரவலாக செயல்படுத்தக்கூடியது அல்ல. மேலும் இது கோப்பு பரிமாற்ற நெறிமுறையின் அதிகாரபூர்வமற்றப் பதிப்பாகவும் இருக்கிறது.
 
== வரலாறு ==
1971 ஏப்ரல் 16-ல், RFC-114 வெளியிடப்பட்டது, அதுவே கோப்பு பரிமாற்ற நெறிமுறையின் மூல தொழில்நுட்ப வரையறையாக இருந்தது. அதன்பின் 1980-ஆம் ஆண்டு ஜூன் மாதம், அது RFC 765 வரையறையால் நீக்கப்பட்டது. அதுவும் பின்னர் அதன் வரிசையில், RFC 959 வரையறையால் 1985-ஆம் ஆண்டு அக்டோபரில் வழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. இதுவே தற்போது நடப்பில் உள்ள பதிப்பாகும்.
 
== பயன் ==
RFC-ஆல் கோடிட்டு காட்டப்படுவது போல, கோப்பு பரிமாற்ற நெறிமுறை கீழ்காண்பனவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன:
* கோப்புகளின் (files) பகிர்வை அதிகரிக்க (கணினி நிரல்களையும் மற்றும்/அல்லது தரவுகளையும் மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு)
வரிசை 11:
* துல்லியமாகவும், நம்பிக்கைகுரிய முறையிலும் [[தரவு]]களை (data) பரிமாற
 
FTP-யை ''ஆக்டிவ் பயன்முறை'', ''பேசிவ் பயன்முறை'' மற்றும் ''விரிவாக்கப்பட்ட பேசிவ் பயன்முறை'' ஆகிய நிலையில் இருந்து இயக்கலாம். விரிவாக்கப்பட்ட பேசிவ் பயன்முறை என்பது செப்டம்பர் 1998-ல் RFC 2428-ல் சேர்க்கப்பட்டது.
 
வலையமைப்பில் தகவல்களைப் பரிமாற்றும் போது, பல தரவு குறியீடுகளைப் பயன்படுத்த முடியும். முக்கியமான இரண்டு பொது பரிமாற்ற வழிகளாவன:
* ஆஸ்கி (ASCII) பயன்முறை: வெறும் சொற்களுக்கு மட்டும். (வேறெந்த தரவு வடிவமும் இதில் சரியாக வராது)
* பைனரி பயன்முறை: அனுப்பும் இயந்திரம் ஒவ்வொரு கோப்பையும் ஒன்றன்பின் ஒன்றாக பைட்டுகளாக (byte) அனுப்புகிறது, பெறும் இயந்திரம், அதை எவ்வாறு பெறுகிறதோ அவ்வாறே ஒன்றன்பின் ஒன்றாக பைட்டுகளைச் சேமிக்கிறது. (இந்த கோப்பு பரிமாற்ற நெறிமுறையின் தரமுறை "IMAGE" அல்லது 'I' பயன்முறை என்றழைக்கப்படுகிறது.)
 
எஃப்டிபி வழங்கனிலிருந்து வெளிவரும் குறியீடுகள்(Codes), அவற்றிற்குள் கொண்டிருக்கும் இலக்கங்களின் மூலமாக அவற்றின் நிலையை எடுத்துக்காட்டுகின்றன.
 
== பாதுகாப்பு ==
தரவு பரிமாற்றத்திற்காக குறியேற்றம் செய்யப்பட்ட வகையில் எந்த குறிப்பிட்ட முறையும் இல்லாததால், நிஜமான எஃப்டிபி தொழில்நுட்ப வரையறை இயல்பாகவே கோப்புகள் பரிமாற்றத்திற்கான பாதுகாப்பற்ற முறையாகவே அமைந்துவிடுகின்றன. இது எதைக் குறிக்கிறது என்றால், பெரும்பாலான வலையமைப்பு உள்ளமைவுகளின் கீழ்,பயனர் பெயர்கள், கடவுசொற்கள், எஃப்டிபி கட்டளைகள் மற்றும் பரிமாற்றப்பட்ட கோப்புகளை ஒரு பேக்கெட் ஸ்னெஃபர் (packet sniffer) பயன்படுத்தி அதே வலையமைப்பில் யாராலும் கைப்பற்றி கொள்ள முடியும் என்பதையே குறிக்கிறது. எச்எச்டிபி, எஸ்எம்டிபி (SMTP) மற்றும் டெல்நெட் போன்ற எஸ்எஸ்எல் (SSL) உருவாக்கத்திற்கு முன்னர் வரை, பல்வேறு இணைய நெறிமுறை தொழில்நுட்ப வரையறைகளில் இதுவொரு பொதுவான பிரச்சனையாக இருந்தது. RFC 4217-ல் குறிப்பிட்டுள்ளவாறு கோப்பு பரிமாற்ற நெறிமுறைக்கு எஸ்எஸ்எல் அல்லது டிஎல்எஸ் குறியேற்றத்தைச் சேர்க்கும் எஸ்எஃப்டிபி (SSH File Transfer protocol) எனும் நெறிமுறையை அல்லது எஃப்டிபிஎஸ் (FTPS - FTP Over SSL) என்ற முறையைப் பயன்படுத்துவதே இந்த பிரச்சினைக்குப் பொதுவாக தீர்வை வழங்குகிறது.
 
== அநாமதேயர் எஃப்டிபி (Anonymous FTP): ==
FTP சேவையை அளிக்கும் ஒரு புரவன், அநாமதேயர் எஃப்டிபி அணுகுதலையும் அளிக்க கூடும். பயனர் பெயர் கேட்கப்படும் போது, ஓர் 'அநாமதேயர்' கணக்குடன், பயனர்கள் இந்த சேவைக்குள் உள்நுழைவார்கள். ஆயினும் பயனர்கள் அவர்களுடைய கடவுச்சொற்களுக்குப் பதிலாக [[மின்னஞ்சல்]] முகவரியை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுவார்கள். உண்மையில் இம்மாதிரியான உள்நுழைவில் அளிக்கப்படும் தரவின் மீது எவ்வித ஆய்வும் செய்யப்படுவதில்லை.
 
நவீன கோப்பு பரிமாற்ற நெறிமுறையைக் கையாளும் கிளையன்கள், பயனர்களின் அநாமதேயர் உள்நுழைவு செயல்பாட்டை மறைத்துவிடுகின்றன, இதில் எஃப்டிபி கிளையன் கடவுச்சொல்லாக வெற்று தரவை அனுப்பி வைத்துவிடும் (இதில் பயனரின் மின்னஞ்சல் முகவரி பயன்பாட்டிற்கு அறியப்படாது என்பதால் இவ்வாறு செய்யப்படும்).
 
== தொலைதூர FTP அல்லது FTP அஞ்சல் ==
எஃப்டிபி அணுகுதல் தடை செய்யப்பட்ட இடத்தில், அந்த பிரச்சனையைச் சமாளிக்க ஒரு தொலைதூர எஃப்டிபி (அல்லது எஃப்டிபி அஞ்சல்) சேவை பயன்படுத்தப்படலாம். செயல்படுத்தப்பட வேண்டிய எஃப்டிபி கட்டளைகளைக் கொண்டிருக்கும் ஒரு மின்னஞ்சலானது, ஒரு தொலைதூர எஃப்டிபி வழங்கனுக்கு அனுப்பப்படுகிறது. ஓர் அஞ்சல் சர்வராக (mail server) இருக்கும் இது உள்வரும் மின்னஞ்சலைப் படித்து, எஃப்டிபி கட்டளைச் செயல்படுத்தும். பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டிய கோப்புகளை, ஓர் இணைப்பாக ஒரு மின்னஞ்சல் மூலமாக திருப்பி அனுப்பி வைக்கும். கோப்பகங்களை வசதியாக பார்வையிடுவதற்கோ அல்லது கட்டளைகளை மாற்றுவதற்கோ சாத்தியப்படுவதில்லை என்பதால், நிச்சயமாக, ஒரு எஃப்டிபி கிளையனை விட இது குறைவான இலகுதன்மை கொண்டதாக தான் இருக்கிறது. மேலும் பெரியளவிலான கோப்பு இணைப்புகளை அஞ்சல் வழங்கிகள் மூலமாக பெறுவதிலும் பிரச்சனைகள் இருக்கிறது. பெரும்பாலும் இன்றைய நாட்களில் இணைய பயனர்கள் FTP-யை அணுகுவதற்கு ஏற்ற வகையில் இருப்பதால், தினசரி பயன்பாட்டிற்கு இந்த செயல்முறை பயன்படுத்தப்படுவதில்லை.
 
== FTP மற்றும் இணைய உலாவிகள் ==
எஃப்பிடிஎஸ் (FPTS) போன்ற நெறிமுறை விரிவாக்கங்களுடன் ஒத்துழைப்பைக் கொண்டிருக்காத போதும், பெரும்பாலான சமீபத்திய [[இணைய உலாவி]]களும், கோப்பு மேலாண்மை பயன்பாடுகளும் எஃப்டிபி வழங்கன்களுடன் இணைப்பைப் பெறும் வகையில் இருக்கின்றன. இது எஃப்டிபி வழியாக தொலைதூர கோப்புகளை, சாதாரணமாக கோப்பைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஓர் இடைமுகத்தைப் போன்ற ஒன்றின் மூலமாக, கையாள அனுமதிக்கிறது. இது FTP தளமுகவரி வழியாக செய்யப்படுகிறது. அது ftp(s)<tt>://</tt><''FTP வழங்கன் முகவரி'' > (எடுத்துக்காட்டாக, ftp://ftp.gimp.org/) என்ற வடிவத்தில் இருக்கும். அந்த தளமுகவரியில், விருப்பப்பட்டால் அளிக்கலாம் என்ற வகையில் ஒரு கடவுச்சொல்லுக்கான இடமும் அளிக்கப்படுகிறது, எடுத்துக்காட்டாக: ftp(s)<tt>://</tt><''உள்நுழை'' ><tt>:</tt><''கடவுச்சொல்'' ><tt>@</tt><''FTP வழங்கன் முகவரி'' >:<''போர்ட்'' >. பெரும்பாலான இணைய-உலாவிகள் பேசிவ் பயன்முறை கோப்பு பரிமாற்ற நெறிமுறையையே பயன்படுத்துகின்றன. இந்த பேசிவ் பயன்முறை கோப்பு பரிமாற்ற நெறிமுறை எல்லா எஃப்டிபி வழங்கன்களாலும் கையாள முடியாது. சில உலாவிகள் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய மட்டுமே அனுமதிக்கின்றன. அதேசமயத்தில் வழங்கனில் கோப்புகளை பதிவேற்றம் செய்ய அனுமதிப்பதில்லை.
 
== FTP மற்றும் NAT சாதனங்கள் ==
PORT கட்டளை மற்றும் PASV மறுமொழிகளில் IP முகவரி மற்றும் போர்ட் எண்களைக் குறிப்பிடுவது, FTP-யைக் கையாள்வதில் வலையமைப்பு முகவரி மொழிபெயர்ப்பு (NAT) சாதனங்களுக்கு மற்றொரு சவாலை முன்னிருத்துகின்றன. தரவு இணைப்பிற்காக NAT சாதனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட NAT-ed கிளையனின் ஐபி முகவரி மற்றும் ஒரு போர்ட்டை NAT கொண்டிருக்கும் வகையில், NAT சாதனங்கள் இந்த மதிப்புகளை மாற்றி ஆக வேண்டும்.
புதிய முகவரி மற்றும் போர்ட் ஆகியவை நிஜமான முகவரி மற்றும் போர்ட்டின் தசம குறியீடுகளின் நீளத்தில் மாறி இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. இது எதைக் குறிக்கிறது என்றால், NAT சாதனத்தால் கட்டுப்பாட்டு இணைப்பில் இருக்கும் மதிப்புகள் மாற்றப்படுவது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டும். அதாவது தொடர்ச்சியாக வரும் அனைத்து பேக்கெட்களின் டிசிபி வரிசைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரிவுகளை மாற்றுவதைக் கவனமாக கையாள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இதுபோன்ற மொழிமாற்றங்கள் வழக்கமாக பெரும்பாலான NAT சாதனங்களில் செய்யப்படுவதில்லை. ஆனால் இந்த தேவைக்காக சிறப்பு பயன்பாட்டு layer gateway-க்கள் இருக்கின்றன.
 
== SSH மீதான FTP (SFTP அல்ல) ==
''SSH (SFTP அல்ல) மீதான FTP'' என்பது ஒரு எஸ்எஸ்எச் இணைப்பின் மீது ஒரு சதாரண எஃப்டிபி பிரிவைத் திருப்பிவிடுவதற்கான முறையைக் குறிக்கிறது.
 
FTP பன்முக டிசிபி இணைப்புகளைப் (இன்றும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு டிசிபி/ஐபி நெறிமுறையில் இது வழக்கத்தில் இல்லை) பயன்படுத்துவதால், அதை எஸ்எஸ்எச் மீது சேர்த்துவிடுவது மிகவும் கடினமாகும். பல்வேறு எஸ்எஸ்எச் கிளையன்களுடன், ''கட்டுப்பாட்டு தடத்திற்காக'' ஒரு வழியை அமைக்க முயற்சிப்பது, அந்த தடத்தை மட்டுமே பாதுகாக்கும்; தரவு பரிமாற்றம் நடக்கும் போது, இரண்டு முனைகளிலும் இருக்கும் எஃப்டிபி மென்பொருள் புதிய டிசிபி இணைப்புகளின் ''தரவு தடங்களையும்'' அமைக்கும். அது எஸ்எஸ்எச் இணைப்பைத் தவிர்த்து விடும். மேலும் இவ்வாறு இரகசியமின்மை, ஒருங்கிணைந்த பாதுகாப்பின்மை, இன்னும் இதர பிற இதுபோன்ற நிலைமைகளைக் கொண்டிருக்கும்.
வரிசை 47:
அப்படி இல்லையென்றால், கோப்பு பரிமாற்ற நெறிமுறை பற்றிய பிரத்யேக விபரங்களை எஸ்எஸ்எச் கிளையன் மென்பொருள் கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமாகும். அத்துடன் எஃப்டிபி கட்டுப்பாட்டுத் தடம் செய்திகளையும் கண்காணித்து, மறுபடியும் எழுதுவது மற்றும் எஃப்டிபி தரவு தடங்களுக்காகக தன்னிச்சையாக புதிய முன்னெடுப்புகளைத் திறந்துவிடுவது ஆகியவற்றையும் செய்வது அவசியமாகும். எஸ்எஸ்எச் தொலைதொடர்பு பாதுகாப்பு மென்பொருள் தொகுப்பின் பதிப்பு 3, மற்றும் ஜிபிஎல் உரிமம் பெற்ற [http://fonc.sourceforge.net FONC] ஆகிய இரண்டு மென்பொருள் தொகுப்புகளும் இந்த பயன்முறைக்கு ஒத்துழைக்கின்றன.
 
எஸ்எஸ்எச் மீதான எஃப்டிபி என்பது சிலநேரங்களில் '''பாதுகாப்பான எஃப்டிபி''' என்றும் குறிப்பிடப்படுகின்றன. இதை SSL/TLS, FTPS போன்ற பாதுகாப்பான பிற எஃப்டிபி முறைகளுடன் குழப்பி விடக்கூடாது. எஸ்எஸ்எச் மூலமாக கோப்புகளைப் பரிமாற்றுவதற்கான பிற முறைகளும் உள்ளன. அதாவது கோப்பு பரிமாற்ற நெறிமுறையோடு தொடர்பற்ற SFTP மற்றும் SCP போன்றவை இதில் உள்ளடங்கும். இவை ஒவ்வொன்றிலும், ஒட்டுமொத்த மாற்றமும் எப்போதும் எஸ்எஸ்எச் நெறிமுறையால் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
 
== மேலும் பார்க்க ==
 
== குறிப்புதவிகள் ==
{{reflist}}
 
== கூடுதல் வாசிப்புக்கு ==
* RFC 959 – (தரமுறைப்படுத்தப்பட்ட) கோப்பு பரிமாற்ற நெறிமுறை (FTP). ஜெ. போஸ்டல், ஜெ. ரெனால்ட்ஸ். அக்டோபர்-1985.
* RFC 1579 – (தகவல்ரீதியான) தீஞ்சுவர் பயன்பாடு கொண்ட FTP.
வரிசை 62:
* RFC 3659 – (முன்வைக்கப்பட்ட தரமுறைப்பாடு) FTP-க்கான விரிவாக்கங்கள். பி. ஹேத்மன். மார்ச்-2007.
 
== பிற வலைத்தளங்கள் ==
{{Wikibooks|Communication Networks/File Transfer Protocol}}
* [http://pintday.org/whitepapers/ftp-review.shtml மீள்பார்வை செய்யப்பட்ட FTP] — குறிப்பாக பாதுகாப்பு நிலைப்புள்ளியில் இருந்து நெறிமுறையின் ஒரு மீள்பார்வை
* [http://www.nsftools.com/tips/RawFTP.htm Raw FTP கட்டளை பட்டியல்]
* [http://www.eventhelix.com/RealtimeMantra/Networking/FTP.pdf FTP சீகுவன்ஸ் வரைபடம்] (PDF வடிவத்தில்)
* [http://www.osischool.com/protocol/tcp/ftp-traffic FTP பயன்பாடு பாவிப்பு]
* [http://www.infobyip.com/ftptest.php FTP வழங்கன் இணைப்பு பரிசோதிப்பு]
 
[[Categoryபகுப்பு:இணைய நெறிமுறைகள்]]
 
[[af:File Transfer Protocol]]
"https://ta.wikipedia.org/wiki/கோப்புப்_பரிமாற்ற_நெறிமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது