சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரசு காமராஜரின் தலைமையில் பலம் பொருந்திய கட்சியாக மாறியிருந்தது. ஆனால் எதிர் கட்சியான திமுகவும் நல்ல வளர்ச்சி கண்டிருந்தது. இந்தத் தேர்தலில் அனைத்து எதிர் கட்சியினரையும் ஓரணியில் திரட்ட [[கா. ந. அண்ணாதுரை]] முயன்றார். ஆனால், இடதுசாரி கம்யூனிஸ்டுகளுக்கும் வலதுசாரி சுதந்திராக் கட்சியினருக்கும் இடையே இருந்த கொள்கை ஒவ்வாமை காரணமாக அவரது முயற்சி கைகூட வில்லை. இறுதியில் [[திருச்சி மாவட்டம்|திருச்சி மாவட்டத்தில்]] மட்டும் திமுக விற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் தொகுதி உடன்பாடு இருந்தது. .எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையாலும் பெரியாரின் ஆதரவாலும் மேலும் வலுவடைந்திருந்த காங்கிரசு, இந்தத் தேர்தலை பெரும் பலத்துடன் சந்தித்தது,<ref name="Robert Hardgrave">{{cite journal | title=The DMK and the Politics of Tamil Nationalism| author=Robert L. Hardgrave, Jr.| journal=Pacific Affairs| year=1964-1965| volume=37|issue=4| pages=396–411| url=http://www.jstor.org/stable/2755132}}</ref><ref>{{cite news | url=| title=| publisher=The Hindu| date=19 february 1962| accessdate=}}</ref><ref name="Lloyd I. Rudolph">{{cite journal | title=Urban Life and Populist Radicalism: Dravidian Politics in Madras| author=Lloyd I. Rudolph| journal=The Journal of Asian Studies| year=May 1961| volume=20|issue=3| pages=283–297| url=http://www.jstor.org/stable/2050816}}</ref><ref>Kannan. R (2009), Anna:Life and Times of C. N. Annadurai. Penguin</ref>
 
இத்தேர்தலில் திரைப்படத்துறையினரின் பங்கு பெரிதாக இருந்த்து. [[எம். ஜி. ராமச்சந்திரன்]] (எம். ஜி. ஆர்) திமுக வின் சார்பாக பிர்ச்சாரம் செய்தார். நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் [[தேனி]] சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சிவாஜி கணேசன் தமிழ் தேசியக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். காங்கிரசு “வாக்குரிமை” என்ற பிரச்சாரப் படத்தைத் தயாரித்து தமிழகமெங்கும் திரையிட்டது.<ref name="Robert Hardgrave"/><ref name="Lloyd I. Rudolph"/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1962" இலிருந்து மீள்விக்கப்பட்டது