வைஷ்ணவ தேவி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: விக்கி கவினுரை
வரிசை 5:
|proper_name = வைஷ்ணவ தேவி
|date_built = அறிவுக்கு எட்டாதது
|primary_deity = வைஷ்ணவ தேவி ([[பராசக்தி]])
|architecture =
|location = [[வைஷ்ணவ தேவி]], [[ஜம்மு மற்றும் காஷ்மீர்]]
}}
 
'''வைஷ்ணவ தேவி கோவில்''' ({{lang-hi|वैष्णोदेवी मन्दिर}}) மிகவும் புனிதமான [[இந்து]] கோயில்களில் ஒன்றாகும், வைஷ்ணவ தேவி கோவில் [[சக்தி]] வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத் தலமாகும், மேலும் வைஷ்ணவ தேவி கோவில் [[இந்தியா]]வில் [[ஜம்மு- காஷ்மீர்]] மாநிலத்தில் [[வைஷ்ணவ தேவி]] மலையில் மிகவும் ரம்யமான, மனத்கிற்கு உகந்த சூழ்நிலையில் அமைந்துள்ளது. [[இந்து சமயம்|இந்து சமயப்படி]], ''' வைஷ்ணவ தேவி,''' '''மாதா ராணி ''' மற்றும் '''வைஷ்ணவி''' என்றும் பக்தர்களை அருள் பாலிக்கிறார், மேலும் உலகத்திற்கெல்லாம் நாயகியாகத் திகழும் அன்னை [[பராசக்தி]]யின்பராசக்தியின் வடிவமாக பக்தர்கள் போற்றி வழிபடுகின்றனர்.
 
இக்கோவில் [[ஜம்மு-காஷ்மீர்]] மாநிலத்தில் [[ஜம்மு]]மாவட்டத்தில் [[கத்ரா]] என்ற ஊரின் அருகாமையில் அமைந்துள்ளது. [[வட இந்தியா]]வில்இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும் மற்றும் [[கத்ரா]] என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் (7.45 மைல்கள்) அமைந்துள்ளது.<ref>வலைத்தளம்: http://maavaishnodevi.org</ref> ஆண்டுதோறும் சுமார் 60,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது காணிக்கைகளை செலுத்துகின்றனர். <ref>வலைத்தளம்: http://www.samaylive.com/news/60000-pilgrims-visit-vaishno-devi-shrine-during-navratras/615962.html</ref> மற்றும் [[திருமலை வெங்கடேஸ்வரர் கோவில்|திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலுக்குப்]] பிறகு மிகவும் அதிகமாக பக்தர்கள் திரள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது. இக்கோவிலை ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் குழு பராமரித்து வருகிறது. [[உதம்பூர்]] என்ற இடத்தில் இருந்து [[கத்ரா]] வரை [[புனித யாத்திரை]] மேற்கொள்வதற்காக இரயில் வசதிகள் மேற்கொண்டு வருகின்றன.
 
== முக்கியத்துவம் ==
[[இந்து புராண இதிகாசம்|இந்து புராண இதிகாசத்தின்]] படி,
மாதா வைஷ்ணவ தேவி ஆன தேவதை இறைவி [[இந்தியா]]வின் தெற்கு பாகத்தில் ரத்னாகர் சாகர் என்பவர் வீட்டில் பிறந்தார், மாதாவின் இவ்வுலக பெற்றோர் நீண்ட நாட்களுக்கு குழந்தை பெறும் பாக்கியம் கிடைக்காமல் வாழ்ந்து வந்தனர். தெய்வீக அம்சம் நிறைந்த இக்குழந்தை பிறக்கும் முன் தின இரவன்று, ரத்னாகர் குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யமாட்டேன் என்று வாக்களித்தார். குழந்தைப்பருவத்தில் மா வைஷ்ணவ தேவி திரிகுடா என அழைக்கப்பெற்றார். பிறகு அவர் மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என அழைக்கப்பெற்றார். திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார். திரிகுடா [[ராமர்]] ரூபத்தில் விளங்கும் [[மகா விஷ்ணு]]வைவிஷ்ணுவை மிகவும் தீவிரமாக வழிபட்டார். ஸ்ரீ [[ராமர்]] தமது படைகளுடன் [[சீதை]]யைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் மேல் விழுந்தது. திரிகுடா ஸ்ரீ [[ராமர்|ராமரிடம்]] அவரை தனது கணவராக ஏற்றுக்கொண்டதாக கூறினார். ஸ்ரீ [[ராமர்]] அவரிடம் இந்த [[தெய்வீகப்பிறப்பு|தெய்வீகப்பிறப்பில்]] அவர் தமது மனைவியான [[சீதை]]க்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார். இருந்தாலும் [[கலியுகம்|கலியுகத்தில்]] அவர் மீண்டும் [[கல்கி]] அவதாரம் எடுக்கப்போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.
 
அதேசமயத்தில் ஸ்ரீ [[ராமர்]] திரிகுடாவிடம் வட [[இந்தியா]]வில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மா அவர்கள் '[[நவராத்திரி]]'யின் பொழுது ஸ்ரீ [[ராமர்]] [[ராவணன்|ராவணனுக்கு]] எதிராக வெற்றி காண்பதற்காக விரதம் மேற்கொண்டார். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே [[நவராத்திரி]]யின் ஒன்பது நாட்களின் பொழுது மக்கள் [[இராமாயணம்|இராமாயணத்தைப்]] படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். ஸ்ரீ [[ராமர்]] அவர்கள் அனைத்து உலகமும் மா வைஷ்ணவ தேவியின் புகழைப்பாடுவார்கள் என வரமளித்தார். திரிகுடா மிகவும் புகழ்பெற்ற அன்னை வைஷ்ணவ தேவியாக மாறுவார் மேலும் என்றென்றைக்கும் அமரராக நிலைத்திருப்பார்.<ref>[http://www.maavaishnodevi.org/mata_vaishno.asp மாதா வைஷ்ணவ தேவி ஜி ]</ref>
 
காலம் செல்லச்செல்ல, அன்னை இறைவி பற்றிய மேலும் கதைகள் வெளிவந்தன. அது போன்ற ஒரு கதையே ஸ்ரீ -தரருடையது.
 
மா வைஷ்ணவ தேவியின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பக்தர் ஸ்ரீ-தராவார். அவர் தற்போதைய [[கத்ரா]]வில்கத்ராவில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஹன்சாலி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தார். ஒரு முறை மா அவர்கள் அவர் முன்னால், ஒரு மிகவும் அழகான, மனதை கொள்ளை கொள்ளும் பெண்ணின் உருவத்தில் காட்சி தந்தார். அந்தச் சிறுமி அடக்கமான பண்டிதரை ஒரு 'பண்டாரா' என்ற விருந்தை படைக்குமாறு கேட்டுக்கொண்டார். (ஆண்டிகள் மற்றும் பக்தகணங்களுக்கு உணவளிக்கும் விருந்து) பண்டிதரும் கிராமத்திலும் மற்றும் அருகாமை இடங்களில் வசிக்கும் மக்களை விருந்துக்கு அழைக்கப் புறப்பட்டார். அவர் 'பைரவ் நாத்' என்ற பெயர் கொண்ட சுயநலம் வாய்ந்த அரக்கனையும் விருந்திற்கு அழைத்தார். பைரவ் நாத் ஸ்ரீ-தரிடம் அவர் எவ்வாறு அவருடைய தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளாய் என்று கேட்டார். தவறுகள் நிகழ்ந்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் சுட்டிக்காட்டினார். இதனால் கவலையுற்று பண்டிதர் அமர்ந்திருக்க, தெய்வீக அம்சம் பொருந்திய அந்தப்பெண் மீண்டும் அவர் முன் தோன்றி, அனைத்து ஏற்பாடுகளும் நடந்தேறும், அதனால் அவர் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறினாள். அக்குடிசையில் 360 க்கும் மேற்பட்ட பக்தர்களை அமர வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அவர் வாக்களித்த படியே பண்டாரா என்ற அந்த விருந்து மிகவும் இனிதாக நடந்து முடிந்தது.
பைரவ் நாத் அந்த தெய்வீகப்பெண்ணிடம் இயற்கைக்கு மாறான சக்திகள் இருப்பதை ஒப்புக்கொண்டார் மேலும் அவரை மேற்கொண்டும் சோதிக்க முடிவுசெய்தார். அவர் அந்த தெய்வீகப்பெண்ணை திரிகூட மலைகளில் தேடி அலைந்தார். 9 மாதங்களுக்கு பைரவ் நாத் அந்த மலைகளில் அந்த மாயம் நிறைந்த பெண்ணைத் தேடி அலைந்தார், அவர் அந்தப்பெண்ணை அன்னை இறைவியின் [[அவதாரம்]] என்றே நம்பினார். பைரவிடமிருந்து ஓடிப்போகும் பொழுது, தேவி அவர்கள் ஒரு அம்பை பூமியில் செலுத்த, அவ்விடத்தில் இருந்து நீரூற்று பெருகியது. அவ்வாறு விளைந்த நதியின் பெயரே ''பாண்கங்கா'' ஆகும். பாண்கங்கா நதியில் குளிப்பதால் (பாண்: அம்பு), அவர்கள் இழைத்த அனைத்து பாவங்களையும் கழுவி போக்குவதோடு, அன்னை இறைவியின் அருளையும் பெறலாம் என அன்னை இறைவியின் மேல் பற்று கொண்டவர்கள் நம்புகின்றனர். இந்த நதியின் கரைகளில் தேவியின் பாதச்சுவடுகள் பதிந்துள்ளது மேலும் இன்றும் அச்சுவடுகள் அதே போல் விளங்குவதை நாம் காணலாம், அதனால் ''சரண் பாதுகா'' என்று பக்தியுடன் இந்த நதியின் கரைகள் மக்களால் இன்றும் போற்றப்படுகின்றன. அதற்குப்பிறகு வைஷ்ணவ தேவி ''அத்கவரி'' என்ற இடத்தின் அருகாமையில் உள்ள கர்ப் ஜூன் எனப்படும் பாதுகாப்பு நிறைந்த குகையில் தஞ்சம் அடைந்து, 9 மாதங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தார் மேலும் அதன் மூலமாக ஆன்மீக ஞானம் மற்றும் சக்திகளை பெற்றார். பைரவர் அவரை கண்டுபிடித்த பொழுது அவருடைய தவம் கலைந்தது. [[பைரவர்]] அவரை கொலை செய்ய முயற்சித்தபொழுது, வைஷ்ணவ தேவிக்கு மகா [[காளி|காளியின்]] உருவத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்னை இறைவியின் இந்த உருமாற்றம் தர்பார் என்ற இடத்திலுள்ள புனிதமான குகையின் வாயில் அருகே நிகழ்ந்தது. அதற்குப்பின் இறைவி மிகவும் ஆக்ரோஷத்துடன் பைரவரின் தலையை துண்டித்தார், அதன் விளைவாக, துண்டித்த மண்டை ஓடானது ''பைரவ் காடி'' என்று அழைக்கப்பெறும் புனித குகையில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தில் சென்று விழுந்தது.
 
இறக்கும் தருவாயில், பைரவர் தன்னை மன்னிக்கும் படி அன்னையிடம் வேண்டிக்கொண்டார். பைரவர் முக்தி அடைவதற்காகவே அவரைத் தாக்கினார் என்பதை இறைவி அறிந்திருந்தார். அவர் பைரவருக்கு [[மறுபிறவி]] என்ற காலச்சக்கரத்தில் இருந்து முக்தி அளித்தார். மேலும், ஒவ்வொரு பக்தனும், இறைவியின் தரிசனம் பெற்றபின்னர் புனித குகையின் அருகாமையிலிருக்கும் பைரவ நாதரின் கோவிலுக்கும் தவறாமல் சென்றால் மட்டுமே பக்தர்கள் அவர்களுடைய புனித யாத்திரையின் பலனைப் பெறுவார்கள் என்ற வரத்தையும் பைரவனுக்கு அளித்து அருள் பாலித்தார். அதேநேரத்தில் வைஷ்ணவ தேவி தன்னை மூன்று சூலங்களுடைய (தலைகள்) கல்லாக உருமாற்றம் செய்து கொண்டார் மேலும் என்றென்றைக்கும் மீளாத தவத்தில் தன்னை ஆட்படுத்திக் கொண்டார்.
 
இதற்கிடையில், பண்டிதர் ஸ்ரீ-தர் பொறுமை இழந்தார். அவர் கனவில் கண்ட அதே வழியை பின்பற்றி திரிகூட மலையை நோக்கி நடந்து இறுதியில் குகையின் வாயிலை அடைந்தார். அவர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வழிகளில் 'திரிசூலத்தை' வழிபட்டார். அவருடைய வழிபாட்டைக்கண்டு இறைவியின் மனம் குளிர்ந்தது. அன்னை அவர் முன் தோன்றி அவரை ஆசிர்வதித்தார். அந்த நாள் முதல், ஸ்ரீ-தர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இறைவி அன்னை வைஷ்ணவ தேவி மாதாவை வணங்கி வருகின்றனர்.<ref>[http://www.maavaishnodevi.org/legend9.asp பண்டிட் ஸ்ரீதர் ]</ref>
 
== படத்தொகுப்பு ==
வரிசை 34:
File:Vaishno Devi Bhavan.jpg|வைஷ்ணவ தேவி பவன்
File:Vaishno Devi Bhawan 2.jpg|வைஷ்ணவ தேவி பவனின் இன்னொரு காட்சி
File:Vaishno Devi Entrance.jpg|யாத்திரை தொடங்கும் த்வார் என்ற இடம்
File:Bhairav Mandir.jpg|பைரவர் கோவில்
</gallery>
வரிசை 42:
<references></references>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.patnitop.net: வைஷ்ணவ தேவி மற்றும் பட்னிடாப் செல்வதற்கான உங்களுடைய புனிதப்பயண திட்டம்.]
* [http://www.matavaishnodevi.com MataVaishnodevi.com: மாதா வைஷ்ணவ தேவி கோவிலைப்பற்றிய அனைத்து தகவல்களும் அடங்கிய வலைத்தளம்]
* [http://www.kashmirhotravel.com/Vaishno_Devi.asp மாதா வைஷ்ணவ தேவி பற்றிய புராதன செவி வழிக்கதைகள்]
* [http://www.maavaishnodevi.org ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் வாரியம்]
* [http://www.vaishnodevi.co.in வைஷ்ணவ தேவி பற்றிய ஆதாரங்கள்]
* [http://www.indiatravelogue.com/leis/pilg/pilg5.html வைஷ்ணவ தேவி கோவிலைப்பற்றிய விரிவான தகவல்கள்]
* [http://www.discoveryofindia.com/vaishno-devi-shrine.php வைஷ்ணவ தேவி கோவில் மற்றும் புனித யாத்திரை]
* [http://www.merimaiya.com என்னுடைய தாய் வைஷ்ணவ தேவி பற்றிய விரிவான வலைத்தளம்]
* [http://www.bharatekkhoj.com/vaishno-devi-shrine.php வைஷ்ணவ தேவி கோவில் மற்றும் புனித யாத்திரைக்கான தகவல்கள்]
* [http://www.angelfire.com/ma2/bharatanatyam/vaishnodevi.html வைஷ்ணவ தேவி மாதாவின் கதை]
* [http://www.onlinemandir.com/matarani/vashnodevi/index.html வைஷ்ணவ தேவி மாதாவின் கதை இந்தி பதிப்பு]
* [http://abclive.in/abclive_regional/mata-vaishno-devi-shrine.html மாதா வைஷ்ணவ தேவி கோவிலில் கட்டணத்துடன் கூடிய உடனடி தரிசன சேவை]
* [http://www.kashmirtourandtravels.com mata vashno devi information abut packages
{{coord missing|India}}
 
[[Categoryபகுப்பு:ஜம்மு-காஷ்மீரில் காணப்படும் இந்து கோவில்கள்]]
[[Categoryபகுப்பு:இந்து புனிதயாத்திரை தளங்கள்]]
[[Categoryபகுப்பு:பராசக்தி கோவில்கள்]]
[[Categoryபகுப்பு:இந்து குகைக்கோயில்கள்]]
 
[[de:Vaishno Devi]]
"https://ta.wikipedia.org/wiki/வைஷ்ணவ_தேவி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது