பொருளியல் பின்னடைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bn:মন্দা-পূর্বাভাস
சி தானியங்கி: விக்கி கவினுரை
வரிசை 1:
'''பொருளியல் பின்னடைவு''' (economic recession) என்பது, தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாவது, ஒரு நாட்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] குறைவடைதல் என விளக்கப்படுகின்றது. பொதுவாக இதனைக் குறைவான [[பொருளியல் செயற்பாடு]]களைக்செயற்பாடுகளைக் கொண்ட காலப்பகுதி எனலாம். இது [[வணிகச்சுழல்]] சுருங்குவதைக் குறிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பொருளியல் ஆய்வு நிலையம், பொருளியல் பின்னடைவு என்பது, "பல மாதங்களுக்கு நீடிப்பதும்; பொதுவாக உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, உண்மையான [[தனியாள் வருமானம்]], [[வேலைவாய்ப்பு]], தொழிற்றுறை உற்பத்தி, மொத்த-சில்லறை வணிகம் போன்றவற்றில் தாக்கம் கொண்டுள்ளதும்; பொருளாதாரம் முழுதும் பரவிக் காணப்படுவதுமான குறிப்பிடத்தக்க பொருளியல் செயற்பாட்டு வீழ்ச்சி" என வரைவிலக்கணம் கூறுகிறது.
 
பொருளியல் பின்னடைவு, ஒரே நேரத்தில் காணப்படக்கூடிய பல இயல்புகளைக் கொண்டது. வேலைவாய்ப்பு, [[முதலீடு]], நிறுவன இலாபம் என்பன குறைதல் இவ்வியல்புகளுள் அடங்கும். கடுமையான அல்லது நீடித்துச் செல்லும் பின்னடைவு, [[பொருளியல் தாழ்நிலை]] (economic depression) எனப்படும்.
 
== பொருளியல் பின்னடைவுக்கான முற்குறிகள் ==
பின்னடைவு வரப்போவதை அறிந்து கொள்வதற்கான முழுமையாக நம்பத் தகுந்த முற்குறிகள் (predictors) எதுவும் கிடையா. பின்வருவன ஓரளவு நம்பக்கூடிய முற்குறிகளாகும்.
 
* ஐக்கிய அமெரிக்காவில் பெரும்பாலும் பொருளியல் பின்னடைவு ஏற்படுவதற்கு முன்னர் பங்குகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் 1946 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 10% அல்லது அதற்கும் அதிகமாகப் [[பங்கு (பொருளியல்)|பங்கு]] விலைகள் வீழ்ச்சியடைந்த அரைவாசியளவு சந்தர்ப்பங்களில் பொருளியல் பின்னடைவு ஏற்படவில்லை. பொருளியல் பின்னடைவு ஏற்பட்ட ஏறத்தாழ 50% சந்தர்ப்பங்களில் பின்னடைவு ஏற்பட்ட பின்னரே பங்கு விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.
* பொருளியலாளரான ஜொனதன் எச். ரைட் என்பவர், [[தலைகீழ் ஈட்ட வளையி]] (Inverted yield curve) என்னும் மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளார். 100 ஆண்டு மற்றும் மூன்றுமாத திறைசேரிக் [[கடன் ஆவணம்|கடன் ஆவணங்களின்]] [[ஈட்டம்]], ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் அரசுக் காப்பு முறைமையின் நாளுக்கான நிதிய விலை என்பவற்றை இம் மாதிரி பயன்படுத்துகின்றது.
* வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் ஏற்படும் மூன்று மாதங்களுக்கான மாற்றம்.
* [[முதன்மைக் குறியீட்டுச் சுட்டெண்]]
 
== பொருளியல் பின்னடைவைக் கையாளல் ==
ஒரு பொருளாதாரத்தைப் பின்னடைவில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கான வழிமுறைகள், கொள்கை வகுப்பாளர்களின் பொருளாதாரக் கொள்கையில் தங்கியுள்ளது. [[கெயின்சியப் பொருளியல்|கெயின்சியப் பொருளியலாளர்கள்]], பொருளியல் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு அரசு [[பற்றாக்குறைச் செலவினம்|பற்றாக்குறைச் செலவினங்களை]] மேற்கொள்ள வேண்டும் எனக் கூறும் அதேவேளை, [[வழங்கல் (பொருளியல்)|வழங்கல்]] முறைப் பொருளியலாளர், வணிக முதலீட்டை ஊக்குவிப்பதற்கு வரிகளைக் குறைக்க வேண்டும் என்பர். [[தலையிடாமைக் கொள்கை]]யை வலியுறுத்தும் பொருளியலாளர்கள் இயல்பான [[சந்தைக் காரணி]]களின்காரணிகளின் செயற்பாட்டில் அரசு தலையிடக்கூடாது என்று கருதுவர்.
 
[[பகுப்பு:பொருளியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பொருளியல்_பின்னடைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது