மாதோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மாதோட்டம்''' என்பது பல [[நூற்றாண்டு]]களுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் [[பட்டினம்]] ஆகும். இது [[இலங்கை]]த் தீவின் வடமேற்குக் கரையில், இன்றைய [[வட மாகாணம், இலங்கை|வடமாகாணத்தின்]] [[மன்னார்]] மாவட்டத்தில் அமைந்திருந்தது. [[பாளி]] மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை ''மாதொட்ட'' அல்லது ''மகாதித்த'' என்று குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலங்களிலிருந்து, இது தமிழில் ''மாந்தை'' என்றும் ''மாதோட்டம்'' என்றும் அழைக்கப்பட்டதாக அறியவருகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முன், இலங்கைத் தீவின் முக்கிய [[துறைமுகம்|துறைமுகமாக]] இது விளங்கியது. பல்வேறு நூல் ஆதாரங்களும், தொல்பொருட்களும் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த [[நாணயம்|நாணயங்களும்]], [[போசலின்]] பாண்டங்களும், மற்றும் பல வணிகப் பொருட்களும் [[அகழ்வாய்வு]]கள் மூலம் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன.
 
[[மல்வத்து ஓயா]] என அழைக்கப்படும் ஆற்றின் [[கழிமுகம்|கழிமுகத்தை]] அண்டி அமைந்திருந்த இப் பட்டினம், அதே ஆற்றங்கரையில் அமைந்திருந்த பண்டைய தலைநகரமான [[அனுரதபுரம்அனுராதபுரம்|அனுரதபுரத்துடன்]] சிறப்பான போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருந்தது. தென்னிந்தியாவுடனான இலங்கையின் வணிகத் தொடர்புக்கு உயிர்நாடியாக விளங்கி வந்ததுடன், மிகப் பழைய காலத்திலிருந்தே இந்நகரில் தென்னிந்தியர்களே பெருமளவில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகின்றது. இதன் அருகே [[திருக்கேதீச்சரம்]] எனப்படும் புகழ் பெற்ற [[சிவன்கோயில்]] இருந்தது. இக்கோயிலின் மீது தேவாரம் பாடிய [[திருஞான சம்பந்தமூர்த்திதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தரும்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரும்]] மாதோட்டத்தின் சிறப்புப் பற்றியும் குறிப்புக்கள் தந்துள்ளார்கள்.
 
இத் துறைமுகத்தின் முக்கியத்துவம் கி.பி ஏழாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் குறையத் தொடங்கியது. [[தென்கிழக்கு ஆசியா]]வின் [[ஸ்ரீவிஜய இராச்சியம்]], கிழக்கு - மேற்குக் கடல் வணிகத்தின் முக்கிய மையமாக மாறியதால், [[அரபிக் கடல்]] பகுதியின் வணிக முக்கியத்துவம் வங்கக் கடலுக்கு மாறியது. மாதோட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் தலைநகர் அனுரதபுரத்தையும் பாதித்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் தலைநகர் இலங்கையின் கிழக்குக் கரைக்கு அண்மையாக இருந்த [[பொலநறுவை]]க்கு மாற்றப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/மாதோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது