விக்கிப்பீடியா:உசாத்துணைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎செமண்டிக் வெப் என்பது என்ன? - RajaManjula: பொருளுணரிய நுட்பம், பொருளுணரிய வலையியல், பொருள்கொள் வலை எ
வரிசை 50:
 
பாலூட்டிகள் அனைத்திற்குமே மாதவிடாய் என்பது உண்டா? அல்லது இந்த வேதனை மனித இனத்துக்கு மட்டும்தானா?--[[பயனர்:இ.பு.ஞானப்பிரகாசன்|இ.பு.ஞானப்பிரகாசன்]] 10:13, 18 ஜூன் 2010 (UTC)
 
== திரு. நக்கீரனாரின் கேள்விக்கு ஒரு பதில் ==
 
பெருமதிப்பிற்குரிய திரு. நக்கீரன் அவர்களுக்கு அன்பு வணக்கம்!
 
மேற்காணும் கேள்விக்கு உங்களுக்கு விடை கிடைத்து விட்டதா? அண்மையில் 'தினத்தந்தி'யின் நூல் விமர்சனப் பகுதியில் 'விடியலை நோக்கிக் களப்பிரர் வரலாறு' என்ற ஒரு புதிய நூலின் விமர்சனத்தைப் பார்த்தேன். அது கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையான (கிட்டத்தட்ட 325 ஆண்டுகள்) களப்பிரர் ஆட்சிக்காலம் பற்றித் தீவிரமாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் என்றும், அந்நூலின் எழுத்தாளர் பல புதிய வரலாற்றுத் தகவல்களை அதில் ஆதாரங்களோடு விளக்கியுள்ளதாகவும் அந்த நூல் விமர்சனப் பகுதியில் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. இந்நூல் உங்களுடைய ஆர்வத்துக்கும் உங்களுடைய அந்தக் கேள்விக்கும் ஓரளவாவது பதிலளிக்கும் என நினைக்கிறேன். எனவே படித்துப் பாருங்கள்! விவரம் பின்வருமாறு:
 
பெயர்: விடியலை நோக்கிக் களப்பிரர் வரலாறு
படைப்பு: திரு. அ. சவரிமுத்து.
வெளியீடு: கலைநிலா பதிப்பகம், 46, ஆசாத் நகர், கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி - 21.
விலை: ரூ. 80/- (இந்திய மதிப்பில்).