பொன்னுருக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: திரு என்பது தெய்வத் தன்மை எனவும், மணம் என்பது இணைதல் எனவும் ...
 
No edit summary
வரிசை 1:
'''பொன்னுருக்கல்''' என்பது [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்து]] தமிழர்களின் இந்துத் [[திருமணம்|திருமண]] ஆகம மரபுச் சடங்குகளில் ஒன்று. [[திருமாங்கல்யம்]] (தாலி) செய்வதற்கு உரிய [[தங்கம்|தங்க]] நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்து பூசை செய்து பின்னர் உருக்குவது பொன்னுருக்கல் எனப்படும்.
திரு என்பது தெய்வத் தன்மை எனவும், மணம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு மேன்மையுடன் கூடிய தெய்வ கடாட்சம் பொருந்திய இணைதல் 'திருமணம்' எனப்படுகின்றது. யாழ்ப்பாணத்து தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் பல சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுவது வழக்கம்.
 
திருமண நாளுக்கு முன்பு பொன்னுருக்கலுக்கு நிச்சயித்த சுபநாளில் மணமகன் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவது மரபாகும். இந்த சுப நிகழ்வில் மணப்பெண்ணைத் தவிர இரு வீட்டு உறவினர்களும், நண்பர்களும் கலந்து சிறப்பிப்பார்கள். குறித்த சுப நாளில் மணமகன் வீடு வாசலில் நிறை குடம் வைத்து விழாவை தொடங்குவார்கள்.
 
மேலும் பார்க்க http://www.yarlmann.lk/head_view.asp?key_c=176
திருமண நாளுக்கு முன்பு பொன்னுருக்கலுக்கு நிச்சயித்த சுபநாளில் மணமகன் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவது மரபாகும். இந்த சுப நிகழ்வில் மணப்பெண்ணைத் தவிர இரு வீட்டு உறவினர்களும், நண்பர்களும் கலந்து சிறப்பிப்பார்கள். குறித்த சுப நாளில் மணமகன் வீடு வாசலில் நிறை குடம் வைத்து விழாவை தொடங்குவார்கள்.
 
தாலி செய்வதற்கு உரிய தங்க நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்து பூசை செய்து பின்னர் உருக்குவது வழக்கமாகும். பொன்னுருக்கும் ஆசாரியர் கும்பம் வைத்து விளக்கேற்றி தூப தீபம் காட்டி பொன்னை உருக்க ஆரம்பிப்பார்.
 
ஆசாரியார் பொன்னை உருக்கிய பின்னர் ஒரு தட்டில் [[வெற்றிலை]], [[பாக்கு]], பழம், [[பூ]], [[மஞ்சள்]], [[குங்குமம்]], [[தேசிக்காய்]] வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தை வைத்து அதை மணமகனுக்கு கொடுப்பார். மணமகன் பூசை அறையில் வணங்கி பொன்னுருக்கலுக்கு வந்திருக்கும் சபையோருக்கு அதை காண்பிக்க வேண்டும்.
 
அந்த தங்கத்தை வைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் வயதா, அனுபவமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது சக்தியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
 
பொன்னுருக்கிய தங்கத்தை தாலி செய்வதற்கு ஒப்படைப்பதோடு குறித்த நாளில் இரு வீடுகளிலும் [[கன்னிக் கால்]] ஊன்ற வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு [[முள் முருங்கை]]யைப் பயன்படுத்துவார்கள். முருங்கைத் தடி நேராக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். இதன் காரணமாக நிறைந்த நேரான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
 
இந்த நாளில் இருந்து திருமண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பதும் மணமக்கள் வெளியில் செல்லக் கூடாது என்பதும் சம்பிரயதாயமாகும். குறித்த நன்னாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்கு உரிய பலகாரங்களைச் செய்யத் தொடங்குவார்கள்.
 
இவ்வாறு தமிழர்களின் இந்து திருமணங்களில் பொன்னுருக்கல் இன்றியமையாத ஒரு சுப நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
 
==உசாத்துணை==
*[http://www.yarlmann.lk/head_view.asp?key_c=176 பொன்னுருக்கல் - யாழ் மண்ணின் மரபு], யாழ்மண்
 
[[பகுப்பு:திருமணம்]]
"https://ta.wikipedia.org/wiki/பொன்னுருக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது