"உசுமானியா பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டிலேயே இரசாயன பொறியியல் மற்றும் இரசாயன தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் கல்லூரிகளில் மிகப் பழமையானதும் முதன்மையானவைகளில் ஒன்றுமாகும். ஓஸ்மானியா பல்கலைக்கழக தொழில்நுட்பப் பிரிவின் கீழ் இது ஒரு இன்றியமையாத கல்லூரியாகும். ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் பயனுறு வேதியியலின் முதுகலைப் பட்டதாரி பிரிவாக இந்தத் தொழில்நுட்பக் கல்லூரி 1943 ஆம் ஆண்டில் ஆரவாரமற்ற ஒரு தொடக்கத்தைக் கொண்டிருந்தது. பின்னர் 1945 ஆம் ஆண்டில் அது பயனுறு வேதியியல் துறையாக மேம்படுத்தப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் வேதிப் பொறியியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு அந்தத் துறையே வேதிய தொழில்நுட்பத் துறையாக மறுபெயரிடப்பட்டது. 1954 ஆம் ஆண்டில் நான்கு ஆண்டு பட்டப்படிப்பு பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை வேதிய தொழில்நுட்பம் மற்றும் வேதிப் பொறியியல் இளங்கலை பட்டங்களுக்கு இட்டுச் சென்றது. 1969 ஆம் ஆண்டு செப்டம்பரில், பல்கலைக்கழகம் வேதிய தொழில்நுட்பத் துறையை தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரியாக மேம்படுத்தி வேதிப் பொறியியல்/வேதிய தொழில்நுட்பத்தின் கல்விக்கான திடமான மையக்கருவாக உருவெடுத்தது, மேலும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்குத் தொழில்நுட்பத்தின் செயற்றிறனை பரவச்செய்வதற்கான ஒரு சந்திப்பு முனையாக சேவை புரியவும் தொடங்கியது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி நிலையில் வேதிப் பொறியியல் மற்றும் வேதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சியளிப்பதற்கும் கற்பிப்பதற்காகவும் இந்தக் கல்லூரி பிரபலமாக அறியப்பட்டுள்ளது. சில ஆண்டுகளிலேயே கல்லூரி மிக விரைவாக விரிவடைந்து வளர்ச்சிபெற்றுள்ளது மேலும் இந்தக் கல்லூரியின் பழைய மாணவர்கள் உலகெங்கிலும் தங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
நாட்டின் மாறிவரும் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உணவு தயாரிக்கும் முறை மற்றும், பதனமிடும் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பத்தில் பிடெக் பட்டப்படிப்பு பாடத்திட்டங்களை 1994-95 ஆம் ஆண்டுகளின்போது இந்தக் கல்லூரி தொடங்கியது. இந்தப் பாடத்திட்டங்களின் முக்கியத்துவம் தானே விளங்கக்கூடியது, ஏனெனில் உணவுதானியங்கள், பழம் மற்றும் காய்கள், பஞ்சு, பட்டு மற்றும் இதர நூலிழைகளின் வள ஆதாரங்கள் மிகுதியாக இருக்கின்றன. மேலும், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள வேறு எந்த பல்கலைக்கழகமோ கல்லூரியோ, கிடைக்கப்பெறும் வள ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான இந்தத் தொழில்நுட்பத்தில் முழு வளர்ச்சியுற்ற நான்கு ஆண்டு பிடெக் பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குவதில்லை.
 
=== உடற்பயிற்சிக் கல்லூரி ===
846

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/558561" இருந்து மீள்விக்கப்பட்டது