குழாயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு மாற்றம்
படம் இணைப்பு
வரிசை 1:
 
[[File:Pipettes.jpg|thumb|right|250px|A selection of pipettes]]
'''குழாயி''' என்பது, குறிப்பிட்ட [[கனவளவு]] கொண்ட [[நீர்மம்|நீர்மத்தை]] (திரவம்) ஓரிடத்திலிருந்து எடுத்து இன்னோரிடத்தில் ஊற்றுவதற்குப் பயன்படும் [[ஆய்வுகூடக் கருவி]]யாகும். குழாயிகள், [[வேதியியல்]], [[மூலக்கூற்று உயிரியல்]], [[உயிரித் தொழில்நுட்பம்]] போன்ற துறைகள் சார்ந்த ஆய்வுகூடங்களிலும், மருத்துவச் சோதனைகளிலும் பயன்படுகின்றன. குழாயிகள் பல்வேறு தேவைகளுக்காக, வெவ்வேறு வடிவமைப்புக்களில் கிடைக்கின்றன. பல மட்டங்களிலான துல்லியங்களுடன்கூடிய இவை, தனியொரு கண்ணாடிக் [[குழாய்]] வடிவிலிருந்து, சிக்கலான அமைப்புக்களுடன்கூடிய மற்றும் மின்னணுக் குழாயிகள் வரை உள்ளன. நீர்மம் கொள்ளும் இடத்துக்கு மேல் [[வெற்றிடம்|வெற்றிடத்தை]] உருவாக்குவதன் மூலம் நீர்மத்தை உள்ளே இழுத்துப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக [[வளி]]யை உள்ளே விடுவதன்மூலம் தேவையான அளவு நீர்மம் எடுப்பதே குழாயியின் செயற்பாட்டின் அடிப்படையாகும். 0.2 தொடக்கம் 1000 [[மைக்குரோ லீட்டர்]] வரை அளவுள்ள நீர்மங்களைக் கையாளுவதற்கான குழாயிகள் நுண்குழாயிகள் (micropipettes) எனப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/குழாயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது