"இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

946 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
எட்டாம் ஹென்றியைப் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் அவர் ரம்யமான, வசீகரமான, கம்பீரமான தோற்றம் கொண்டவராக வர்ணிக்கின்றன.சர்வாதிகாரியாக அவர் இங்கிலாந்தை ஆண்டர்; அப்படிப்பட்ட ஆட்சியை நடத்திய கடைசி மன்னராக இதுவரை இருக்கக் கூடும்.
 
தனது அகம்பாவத்திற்காக மட்டுமின்றி தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காகவும் அவர் ஆறுமுறை மணந்துகொண்டார். தனது நாட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்ணுக்கு போதிய வலிமை இல்லை என்று உறுதியாக் நம்பினார். ஆறு திருமணங்கள் புரிந்த சாதனையோடு அவர் புரடஸ்தந்தம்(ஆங்கிலம்: )இங்கிலாந்து தேசிய மதமாகுவதற்கு மறைமுகக் காரணமாகவும் இருந்ததால் அவர் இன்றும் ஆங்கில் உலகத்தில் பேசப்பட்டு வருகிறார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் பார்ப்போருக்கு அறுவறுப்பை அள்ளி வீசும் அளவிற்கு பருமனாக வளர்ந்தார்; பல்வேறு நோய்கள் சங்கமிக்கும் கூடாரமாக விளங்கினார். ஆணவக்காரன்,பைத்தியக்காரன், காமவெறியன், ஈரமற்றவன், கொடுங்கோலன், தாழ்வு மனப்பான்மை கொண்டவன் என்று பலர் அவரைப்பற்றி பேசினர்தூற்றினர்.
 
ஆறு பெண்களை ஒன்றன் பின் ஒன்றாக மணந்துகொள்வது, அவர்களில் இரண்டு பேரின் தலையை வெட்டி மரண தண்டனை கொடுப்பது, ஆகிய அவரது செயல்களை ஒட்டி பல புதின புத்தகங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவை படைக்கப்பட்டிருக்கின்றன.இவற்றில் மூலம் எட்டாம் ஹென்றி இன்றும் சாதாரண ஆங்கிலேய மக்களிடையே ஒரு பிரபல வரலாற்று நபராகப் பேசப்படுகிறார்.
 
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/559040" இருந்து மீள்விக்கப்பட்டது