கலம்பகம் (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
No edit summary
வரிசை 1:
[[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]], '''கலம்பகம்''' என்பது பலவகைச் [[செய்யுள்]]களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான [[பிரபந்தம்|பிரபந்தவகை]] இலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப் பிரபந்தவகைக்கு இப் பெயர் ஏற்பட்டது.
 
ஒருபோகும், [[வெண்பா]]வும், முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் [[புயவகுப்பு]], [[மதங்கம்]], [[அம்மானை]], [[காலம்]], [[சம்பிரதம்]], [[கார்]], [[தவம்]], [[குறம்]], மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் இப்பதினெட்டு உறுப்புக்களும் இயைய, [[மடக்கு]], [[மருட்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]], [[ஆசிரிய விருத்தம்]], [[கலி விருத்தம்]], [[கலித்தாழிசை]], [[வஞ்சி விருத்தம்]], [[வஞ்சித்துறை]], [[வெண்துறை]] என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ [[அந்தாதித் தொடை]]யால் பாடுவது கலம்பகம்.
 
கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் [[யாப்பியல்]] நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.
வரி 6 ⟶ 8:
 
* [[நந்திக் கலம்பகம்]]
* [[காசிக் கலம்பகம்]]
* [[மதுரைக் கலம்பகம்]]
* [[வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம்]]
* [[திருக்கண்ணபுரக் கலம்பகம்]]
* தில்லைக் கலம்பகம்
* [[மறைசைக் கலம்பகம்]]
* [[அருணைக் கலம்பகம்]]
* [[கதிர்காமக் கலம்பகம்]]
* [[கச்சிக் கலம்பகம்]]
* [[வெங்கைக் கலம்பகம்]]
* [[புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம்]]
* [[திருவாமாத்தூர்க் கலம்பகம்]]
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/கலம்பகம்_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது