தட்டச்சுக் கருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: fa:ماشین‌تحریر
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Underwoodfive.jpg|thumb|250px|பொறிமுறைத் தட்டச்சுக் கருவியொன்று.]]
 
'''தட்டச்சுக் கருவி''' (''typewriter'') என்பது, பொறிமுறை (mechanical), மின்பொறிமுறை (electromechanical) அல்லது மின்னணுவியல் (electronic) கருவியாகும். இதிலுள்ள எழுத்துக்களுக்குரிய விசைகளை அழுத்தும்போது அக்கருவியில் பொருத்தப்படுகின்ற காகிதத்தின்மீது [[எழுத்து]]க்கள் பொறிக்கப்படுகின்றன.
 
[[20ம் நூற்றாண்டு|20 ஆம் நூற்றாண்டின்]] பெரும் பகுதியில், அலுவலகங்களிலும், தொழில்முறை எழுத்தர்கள் மத்தியிலும், தட்டச்சுக் கருவி இன்றியமையாத ஒன்றாக விளங்கியது. 1980 களை[[1980கள்|1980களை]] அண்டிக் [[கணினி]]களும், அவற்றில் பயன்படுத்தப்படக்கூடிய [[சொல் தொகுப்பி]]களும் அறிமுகப் படுத்தப்பட்டபோது தட்டச்சுக் கருவியினால் அச்சுப்பொறித்தல் செல்வாக்கிழந்தது. எனினும் இன்னும் பல வளர்ந்துவரும் நாடுகளில் தட்டச்சுக் கருவியின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்துவருகிறது.
 
2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, [[சிமித்-கொரோனா]], [[ஒலிவெட்டி]], [[அட்லர்-ரோயல்]], [[பிரதர்]], நாகாஜிமா ஆகிய நிறுவனங்கள் தட்டச்சுக் கருவி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. கைமுறைத் (manual) தட்டச்சுக் கருவி உற்பத்தி செய்கின்ற ஒரே மேனாட்டு நிறுவனம் ஒலிவெட்டியாகும். ஏனைய தற்கால வகைகள் அனைத்தும் மின்னணுத் தட்டச்சுக் கருவிகளே
 
==இவற்றையும் பார்க்க==
* [[டுவோரக் விசைப்பலகை]]
* [[ஆர். முத்தையா]]
 
[[பகுப்பு:தட்டச்சு|*]]
[[பகுப்பு:அலுவலகப் பயன்பாட்டுப் பொருட்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/தட்டச்சுக்_கருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது