உலா (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தமிழ் இலக்கியத்தில் '''உலா''' என்பது [[பிரபந்தம்]] எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். [[யானை]], [[குதிரை]], [[தேர்]] போன்றவற்றில் ஏறி, [[இசைக் கருவி]]களை இசைப்போர் முன்னே வர, மக்கள் புடைசூழ நகர வீதிகளில் வருவது உலா என்னும் சொல்லால் குறிக்கப்படும். இறைவனோ அல்லது அரசனோ இவ்வாறு உலா வருதலையும், அவ்வாறு உலா வருபவரைக் கண்டு மகளிர் காதல் கொள்வதையும் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படுவதே உலா இலக்கியம் ஆகும். [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்திலும்]], [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களிலும்]] கூட உலா பற்றிய கருத்தாக்கங்கள் காணப்பட்டாலும், உலா என்பது ஒரு தனி இலக்கிய வகையாக உருவானது பிற்காலத்திலேயே ஆகும். பிற்காலத்துப் [[பாட்டியல்]] நூல்கள் உலா இலக்கியத்துக்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும் உலாவரும் தலைவனைக் கண்டு அவன் மீது காதல் கொண்டு வருந்தும் நிலையைக் [[கலிவெண்பா]]ப் பாட்டினால் கூறுவது என்பதே உலா இலக்கியத்துக்கு இந் நூல்கள் கூறும் இலக்கணம் ஆகும்<ref>நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 45 ஆம் பாடல்</ref>.
 
==உலா இலக்கியங்கள் சில==
வரிசை 12:
<references/>
==உசாத்துணைகள்==
* கலியாண சுந்தரையர், எஸ்., கணபதி ஐயர், எஸ். ஜி. (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல் நவநீத நடனார் இயற்றியது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[பாட்டியல்]]
 
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/உலா_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது