"குடுமியான்மலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

96 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎வரலாறு: ===குடைவரைக் கோயில்=== ===கல்வெட்டுகள்===
சி (→‎வரலாறு: ===குடைவரைக் கோயில்=== ===கல்வெட்டுகள்===)
தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில், குடுமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் [[திருநாலக்குன்றம்]] என்றும், பின்னர் [[சிகாநல்லூர்]] என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது.
 
===குடைவரைக் கோயில்===
குன்றின் மேலும், அதன் அருகிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும், கலை நயம் மிக்க சிலைகளை உடைய [[சிகாநாதசுவாமி கோயில்]] என்ற பெரிய சிவன்கோயிலும் அடங்கும். குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.
 
===கல்வெட்டுகள்===
இந்தக் கல்வெட்டுகள், குடுமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதிசெய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும், பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடுமியான்மலைக் கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டுச்செல்கின்றன. மேலக்கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்தச் சிவாலயம் [[சைவ சமயம்|சைவ சமய]] மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இங்குள்ள சிற்பங்கள் ஒன்றில், [[சிவன்]] வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடுமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.
 
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/565239" இருந்து மீள்விக்கப்பட்டது