"தென்கிழக்காசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,796 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
விரிவு
சி (விரிவு)
சி (விரிவு)
 
===தென்கிழக்காசியாவில் பண்டையத் தமிழர்===
[[File:800px-Candi2.jpg|thumb|right|210px|தொல்லியல் சான்று, [[கடாரம்]]]]
தமிழ் நாட்டினருக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் [[2000]] [[ஆண்டு]]களுக்கு முன்பே தொடர்பு இருப்பதற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. [[கெடா]]வில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று [[முதலாம் குலோத்துங்கச் சோழன்|முதலாம் குலோத்துங்கச் சோழனால்]] விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இக்[[கல்வெட்டு]], [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியில் சோழ நாட்டிற்கும் கடாரத்திற்கும் உள்ள வணிகத் தொடர்பை விளக்கிக் காட்டியுள்ளது. அதுப்போக புக்கிட் மெரியாம், [[மூடா ஆறு|மூடா ஆற்றின்]] படுகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் [[பல்லவர்|பல்லவப்]] பேரரசு [[வட்டெழுத்து]]கள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
சுவர்ணபூமி (தற்போதைய தீபகற்ப [[மலேசியா]]) இப்பெயர், [[தமிழகம்|தமிழகத்திலிருந்து]] வணிக நிமித்தம் கடல்வழி அடிக்கடி வந்துப்போகும் [[தமிழ்]] வணிகர்களால் இம்மண்ணுக்கு சூட்டப்பட்டது. [[2000]] ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வணிகர்கள் சுவர்ணபூமியில் காலடி பதித்திருக்கின்றனர் என்பதற்கு பல மறுக்க முடியாத தடயங்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு அன்றையக் காலக்கட்டத்தில் சுவர்ணபூமியில் வாழ்ந்தவர்கள் அனைவரும் (காட்டு வாசிகளைத் தவிர) இந்து மதத்தையும்[[ மகாயானம்|மகாயான]] புத்த மதத்தையும் தழுவி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏறத்தாழ 30 குட்டி அரசுகள், சுவர்ணபூமியில் தோன்றி மறைந்துள்ளதாக தடயங்கள் கூறுகின்றன. இந்த அரசுகளின் ஆட்சிக் காலமும் குறுகிய காலமாக இருந்துள்ளது, அதற்குக் காரணம், வடக்கில் [[கம்போடியா]]வில் மிகப் பெரிய இந்துப் பேரரசுகளான ‘அங்கோர் வாட்’ பேரரசும், தெற்கில் [[ஜாவா]]வில் இந்து அரசான ‘மாஜாபாகிட்’ அரசும் தலையெடுத்ததுதான்.
 
7-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து, 13-ஆம் நூற்றாண்டுவரை [[சிறீ விஜயம்]] எனும் இந்துப் பேரரசு தென் கிழக்காசிய பகுதிகளில் பெரும்பகுதிகளை ஆண்டு வந்தது. சிறீ விஜயத்தின் பேரரசும் வடக்கு [[சுமத்திரா]] முனையிலிருந்து, மயூரடிங்கம், மாப்பாலம், மேவிலிம்பங்கம், மாடமாலிங்கம் ( அனைத்தும் சுவர்ணபூமி தீபகற்பத்தில் வடப்பகுதியில் உள்ள ஊர்களின் பெயர்), யவத்வீபம் (ஜாவா தீவு ) வரை பரவியிருந்தது. இருப்பினும் 11-ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் சோழ சாம்ராஜ்யத்தின் மன்னராக திகழ்ந்த முதலாம் [[இராஜேந்திர சோழன்]] அவரின் தலைமையில் மிகப் பெரிய கடற்படை ஒன்று கடராத்தின் அரசு சம்பத்தப்பட்ட உட்பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கு, கடாரத்தின் மீது படையெடுத்தது. முடிவில் சிறீ விஜயம் பின்வாங்கி அடிபணிந்தது, கடாரம் [[சோழர்|சோழ]] நாட்டு இராஜ்ஜியத்தின் கீழ் சேர்ந்தது.
 
== ஆசியாவின் மற்ற மண்டலங்கள் ==
23,036

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/566303" இருந்து மீள்விக்கப்பட்டது