வ. வே. சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் using AWB
சிNo edit summary
வரிசை 78:
==மறைவு==
 
தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று [[அம்பாசமுத்திரம்]] [[அருவி]] காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சுற்றுலாவைக்கூட மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய வவேசு அவர்கள் அகண்ட அருவியை பயமின்றி தாண்டுமாறு மாணாக்கருக்குப் பணித்தார். சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார். தந்தையான வவேசுவின் தயக்கத்தைக் கண்டு "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று கூறும் நீங்கள் பெண் என்பதால் என்னை தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா" என்று கூறியதால் உவகை அடைந்த பெருமான் தன் பெண் குழந்தைக்கும் அருவி தாண்ட அனுமதி தந்தார். சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த வவேசுவும் அவ்வருவியிலேயே அமரத்துவம் எய்தினர். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு [[பாபநாசம் அருவி]]யில்அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜூன் 4ல் அணைந்தது.
 
==நினைவு இல்லம்==
[[தமிழ்நாடு அரசு]] வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் [[திருச்சி]]யில் அவர் வாழ்ந்த இல்லம் [http://www.tn.gov.in/tamiltngov/memorial/vavesu.htm வ.வே.சு. ஐயர் நினைவகம்] எனும் பெயரில் நினைவு இல்லமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சு. ஐயர் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வ._வே._சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது