ஏழாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
'''பாடல் 61 - புலாஅம் பாசறை'''
 
(கோவே!) பாரி வாரா உலகம் சென்றுவிட்டான் என்று உன்னை நாடி வரவில்லை. உன் கொடையைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். நீ வழங்கிய கொடையை எண்ணி வருந்துவது இல்லையாம். இன்னும் வழங்கும்போது மகிழ்வதும் இல்லையாம். கொடைச்செயலில் உனக்கு மகிழ்வும் இல்லையாம், வருத்தமும் இல்லையாம். புலவு நாறும் பாசறையில் வேலை உயர்த்திக்கொண்டும், முழவை முழக்கிக்கொண்டும் பாடினி ஆடும் 'வெண்கை விழா'வில் மட்டும் நீ மகிழ்கின்றாயாம். அதனைக் காண வந்தேன். - புலவர் கூற்று.
 
பாடல் 62 - வரைபோல் இஞ்சி
 
மழை போல் படை நடத்தி மடங்கல் போல் முழங்கிக்கொண்டு சென்று வலிமை மிக்க கோட்டைகளை வென்றவன் நீ. உன்னைப் பணிந்து இறை தந்தால் உன் பகைவர்கள் அவர்களது நாட்டில் ஆனிரைகளை அச்சமின்றி மேய்த்துக்கொண்டு, ஆற்றில் பூத்த ஆம்பலைத் தலையில் சூடிக்கொண்டு, காஞ்சி நிழலில் அமர்ந்து, அரியல் என்னும் பழச்சாற்றை அருந்தி மகிழலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது