எட்டாம் பத்து (பதிற்றுப்பத்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
பாடல் 71 - குறுந்தாள் ஞாயில்
 
பெரும! உன்னை உசுப்பி விட்டவர் யாது செய்வதென்று தெரியாது கலங்கினர். மக்கள் நெல்லைக் கூடு கூடாகச் சேமிப்பது வழக்கம். அம்பணம் என்பது ஒரு கூட்டில் இருக்கும் நெல். விளையாடிய இரண்டு சிறுவர்கள் அப்படிச் சேமித்த நெல் கூட்டை ஓட்டை போட்டுவிட்டனர். நெல் பொதபொதவென்று கொட்டியது. சிறுவர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர். அதுபோலப் பகைவர் பெருஞ்சேரல் இரும்பொறையின் சினத்தைத் தூண்டி விட்டுவிட்டுத் துடித்தனர்.<br />[[தோட்டி மலை]] நகரக் கோட்டை]] ஆழமான அகழியும், உயரம் குறைந்த மதிலையும் கொண்டது. ஊரைச் சுட்டபின் நீ அதனைக் கைப்பற்றினாய்.<br />[[கழுவுள்]] என்பவனை வென்று அவன் நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து வந்தாய். அதனால் அவன் நாட்டில் தயிரைக் கடையும் மத்தும் கயிறும் ஆடாமல் போயிற்று. கழுவுள் பல ஊர்களில் விருந்தினனாகத் திரிந்த பின் உன்னைப் பணிந்து திறை தந்தான். உன்னை அணங்கு என்று வழிபட்டான். உரவர், மடவர் என்னும் இரு பாலாரையும் நீயே உணராவிட்டால் இவ் உலகில் மடவர்க்கு வாழ்வு ஏது? அருள்வாயாக.<br />(தோட்டி அரசனும், கழுவுள் என்பவனும் நெல்லுக் கூட்டைத் தொளையிட்ட சிறுவர் போல் செய்வது அறியாமல் திகைத்தனர்.)
 
 
"https://ta.wikipedia.org/wiki/எட்டாம்_பத்து_(பதிற்றுப்பத்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது