தஞ்சைவாணன் கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தஞ்சைவாணன் கோவை''' [[பொய்யாமொழிப் புலவர்]] என்பவரால் இயற்றப்பட்ட ஒரு [[அகப்பொருட்கோவை]] நூலாகும். இது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் தஞ்சைவாணன் என்னும் சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. தஞ்சைவாணன், [[பாண்டிநாடு|பாண்டிநாட்டை]] ஆண்ட குலசேகர பாண்டியனின் படைத் தலைவனாகவும் அமைச்சராகவும் இருந்ததோடு, மாறை என்னும் நாட்டை ஆண்டு வந்ததாகவும் தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.
 
இந்நூல் தஞ்சைவாணன் என்னும் சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. தஞ்சைவாணன், [[பாண்டிநாடு|பாண்டிநாட்டை]] ஆண்ட குலசேகர பாண்டியனின் படைத் தலைவனாகவும் அமைச்சராகவும் இருந்ததோடு, மாறை என்னும் நாட்டை ஆண்டு வந்ததாகவும் தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.
 
கோவை நூல்கள் அகப்பொருள் இலக்கியமாகவே எழுதப்படும் மரபுக்கு ஏற்ப இது தலைவன் தலைவியின் அகவாழ்க்கை பற்றியதாக அமைந்துள்ளது. இதற்கு ஒப்ப இது, களவியல், வரைவியல், கற்பியல் என்னும் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று இயல்களிலும் உள்ள முப்பத்துமூன்று பிரிவுகளில் மொத்தம் 425 பாடல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், களவியலில், 18 பிரிவுகளில் 280 பாடல்களும், வரைவியலில் 8 பிரிவுகளில் 86 பாடல்களும், கற்பியலில் 7 பிரிவுகளில் 59 பாடல்களும் அடங்குகின்றன. இந்நூல் முழுதும் [[கட்டளைக் கலித்துறை]] என்னும் பாவகையில் எழுதப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சைவாணன்_கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது