சங்கிலித்தோப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சங்கிலி வளைவு, யாழ்ப்பாணம், இலங்கை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

08:21, 18 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்

சங்கிலித் தோப்பு என்பது இலங்கைத் தீவின் வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றது. தற்காலத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட இந் நிலப் பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்துக்கான குறியீடுகளாக இருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக் குறிப்பிடப்படுகின்ற கட்டிடமொன்றின் வாயில் வளைவும், யமுனா ஏரி எனப்படும் பகர வடிவக் கேணியொன்றும் ஆகும்.

அமைவிடம்

சங்கிலித் தோப்பு, யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் நல்லூரில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் இது அமைந்துள்ளது. முற் குறிப்பிட்ட சங்கிலித்தோப்பு வளைவும், இவ் வீதியை அண்டியே உள்ளது. யமுனா ஏரி, வீதியிலிருந்து சற்றுத் தொலைவில், பிற்காலத்தில் உருவான குடியேற்றப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதைக் காணலாம். வீதிக்கு அடுத்த பக்கத்தில்,சங்கிலித்தோப்புக்கு எதிரே இன்னொரு அரசத் தொடர்புள்ள இடமான, மந்திரிமனை உள்ளது. இதற்கு அருகிலேயே, யாழ்ப்பாண அரசர்களால் அமைக்கப்பட்ட சட்டநாதர் சிவன் கோயிலும் காணப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கிலித்தோப்பு&oldid=57084" இலிருந்து மீள்விக்கப்பட்டது