சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அதிவீரராம பாண்டியர்''' 14 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர் எனக் கருதப்படும் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவர் ஆவார். இவர் சுமார் 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். [[வடமொழி]]யிலும், [[தமிழ்|தமிழிலும்]] தோன்றிய, [[நளன்]] கதை கூறும் நூல்களைத் தழுவி [[நைடதம்]] என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் [[வெற்றி வேற்கை]] என்னும் நூலையும், [[காசிக்காசி காண்டம்]], [[கூர்ம புராணம்]], [[இலிங்க புராணம்]] ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் [[கொக்கோகம்]] எனப்படும் காமநூலும் இவர் இயற்றியதே.
 
மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல [[கோயில்]]களையும் கட்டுவித்துள்ளார். தென்காசியில் இருக்கும் சிவாலயம் ஒன்றும் [[விஷ்ணு]] ஆலயம் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சடையவர்மன்_அதிவீரராம_பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது