10,402
தொகுப்புகள்
(clean up using AWB) |
|||
'''வரையறுத்த பாட்டியல்''' என்பது ஒரு [[பாட்டியல்]] நூல். ஆனால் இது மிகவும் சிறியது. வாழ்த்து, அவையடக்கம், வருபொருள் என்பன கூறும் மூன்று பாடல்களுடன் சேர்த்துப் பத்துப் பாடல்களே இந்நூலில் காணப்படுகின்றன. எனவே எடுத்த பொருள் பற்றிக் கூறுவன ஏழு பாடல்கள் மட்டுமே. இதற்குச் '''சம்பந்தப் பாட்டியல்''' என்னும் ஒரு பெயரும் உண்டு<ref>இளங்குமரன், இரா., 2009. பக். 338.</ref>.
இந்நூலை இயற்றியவர் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. சம்பந்தப் பாட்டியல் என்ற பெயர் வழங்குவதால் இதை இயற்றியவரது பெயர் சம்பந்த மாமுனியாக இருக்கலாமோ எனச் சிலர் ஐயுறுவர். ஆனாலும் நூலின் முதல் பாடலில் சம்பந்த முனியை வணங்கி நூல் தொடங்குவதால் சம்பந்த மாமுனி நூலாசிரியரின் ஆசிரியராக இருக்கக்கூடும் என்னும் கருத்தும் நிலவுகிறது.
இந்நூலில் உள்ள பாடல்கள் [[கட்டளைக் கலித்துறை]] என்னும் பாவகையால் எழுதப்பட்டவை. [[அந்தாதி]]யாகவும் அமைந்துள்ளன.
==இவற்றையும் பார்க்கவும்==
[[தமிழ் இலக்கியப் பட்டியல்#இலக்கண நூல்கள்|தமிழ் இலக்கணப் பட்டியல்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
|