ரத்தன் டாட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎தொழில் வாழ்க்கை: சிறு திருத்தம்
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 73:
 
[[படிமம்:TATA Nano.jpg|thumb|right|250px|டாடா நானோ கார், 2008]]
ஒரு இலட்சம் [[ரூபாய்]] விலையுள்ள ஒரு தானுந்தை மக்களுக்காக தயாரித்து விற்பது ரத்தன் டாடாவின் நீண்ட காலக்கனவாக இருந்தது. (1998 ஆம் ஆண்டில், தோராயமாக 2200 அமெரிக்க டாலர்கள்; இன்று 2000 அமெரிக்க டாலர்கள்) {{ToUSDconvertToUSD|100000|INR}}). 2008 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று புது தில்லியில் நடைபெற்ற மோட்டார் வாகனப் பொருட்காட்சியில் அந்த தானுந்தை அறிமுகப்படுத்தியதுடன் அவரது கனவு நனவானது. [[டாடா நானோ]] வின் மூன்று மாதிரிகளை காட்ச்சிக்கு வைத்தார்கள். ஒரு இலட்சம் ருபாய் விலையில் ஒரு தானுந்தியை தயாரித்து தனது வாக்குறுதியை ரத்தன் டாடா நிறைவேற்றினார். அத்துடன், தான் வாக்களித்தபடி குறிப்பிட்ட விலையில் தானுந்தை உற்பத்தி செய்ததைக் குறிப்பிடும் வகையில் "ஒரு வாக்குறுதி ஒரு வாக்குறுதியே" என்றும் கூறினார். ஆயினும், காரின் விலை பின்னர் அதிகரித்துள்ளது. அண்மையில் மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில், நானோ உற்பத்திக்கான அவரது தொழிற்சாலைக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தபோது, அம்மாநிலத்தை விட்டு வெளியேற அவர் எடுத்த முடிவை இந்திய வணிக ஊடகங்களும் ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கமும் வரவேற்றன. ரத்தன் டாடா, புத்ததேப் பட்டாச்சார்ஜியின் தலைமையிலான இடதுசாரி அரசுடன் சேர்ந்துகொண்டு, மக்களை அவர்களது நிலத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றுவதாக பானர்ஜி குற்றம் சாட்டினார்.
 
மேற்கு வங்கத்தில் சில காலம் இருந்தது சர்ச்சைக்குள்ளான பிறகு, ரத்தன் டாடா தனது குழுவினருடன் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, அவர்களது ஒரு இலட்சம் ரூபாய் நானோ கார் திட்டத்தை [[அகமதாபாத்]] அருகே உள்ள சானந்துக்கு மாற்றினர். 2000 கோடி ரூபாய் (20 பில்லியன் ரூபாய்) முதலீட்டில், உலகின் மிக மலிவான கார், தற்காலிகமாக அமைந்த தொழிற்சாலையில் இருந்து குறித்த தேதியில் தயாரித்து வழங்குவோம் என்றும் அறிவித்தார். தொழிற்சாலையை அமைப்பதற்கு, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவருக்கு இலவச நிலம் உள்ளிட்ட பெரும் சலுகைகளை வழங்கினார். மையப் பகுதியில் அமைந்துள்ள {{convert|1100|acre|km2}} நிலத்தை விரைவாக ஒதுக்கீடு செய்ததற்காக மோடியை ரத்தன் டாடா பாராட்டினார், நிறுவனத்திற்கு மிகவும் அவசரமாக புதிய இடம் தேவைப்பட்டதால், மாநிலத்தின் நற்பெயரைக் கணக்கில் கொண்டு அம்மாநிலத்தை தேர்ந்தெடுத்ததாக கூறினார்.
"https://ta.wikipedia.org/wiki/ரத்தன்_டாட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது