சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
1876 இன் பிற்பகுதியில் பஞசத்தின் கடுமை காலனிய அரசாங்கத்திற்கு தெளிவானது. அப்போது சர் ரிச்சர்ட் டெம்பிள் இந்திய அரசாங்கத்தின் பஞ்சக்குழு ஆணையராக (Famine Commissioner) இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் [[பீகார்|பீகாரில்]] பஞ்சம் வந்தபோது நிவாரணப் பணிகளுக்கு அதிக பணம் செலவிட்டார் என இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இம்முறை சென்னை மாகாணத்தில் பெரிய அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள டெம்பிள் தயங்கினார். தானிய ஏற்றுமதியைத் தடை செய்ய மறுத்து விட்டார். பஞ்சம் தீவிரமடைந்தபின், நிவாரணப் பணிகள் மெல்லத் தொடங்கின – ஆனால் நிவாரணம் பெறுவோர் கடுமையான விதிகளுக்குட்படுத்தப் பட்டனர். முதியோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகளுக்கு மட்டும் இலவச உணவு வழங்கப் பட்டது. ஏனையோருக்கு கடுமையான உடலுழைப்புக்கு பதிலாகவே நிவாரணமளிக்கப் பட்டது.<ref name="igi-III-488">{{Harvnb|Imperial Gazetteer of India vol. III|1907|p=488}}</ref><ref>{{Harvnb|Hall-Matthews|1996|pp=217-219}}</ref><ref>{{Harvnb|Hall-Matthews|1996|p=217}}</ref> நிவாரணக் கூலி பெற்றவர்களைக் கண்டு பல கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. [[சென்னை]] நகரின் அருகில் உள்ள [[பக்கிங்காம் கால்வாய்]] இவ்வாறு கட்டப்பட்டதே.
 
டெம்பிள் ஊதியம் (Temple Wage) என்றழைக்கப் பட்ட நிவாரணத் திட்டத்தில், வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினமும் ஒரு அணா (1/16 ரூபாய்) வும் 450 கிராம் தானியமும் வழங்கப்பட்டன.<ref name=hall-mathews2008-5>{{Harvnb|Hall-Matthews|2008|p=5}}</ref><ref>{{Harvnb|Washbrook|1994|p=145}}</ref><ref name="igi-III-489">{{Harvnb|Imperial Gazetteer of India vol. III|1907|p=489}}</ref> அதற்கு பதில்அதற்காக நாள் முழுவதும் அவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும்.<ref name = hall-matthews-1996-219>{{Harvnb|Hall-Matthews|1996|p=219}}</ref> நிவாரணம் பெறுபவர்களிடம் கடுமையான வேலை வாங்காவிட்டால் மக்கள் சோம்பேறிகளாகி மேலும் பலர் நிவாரணம் கோருவர் என்று டெம்பிளும், மற்ற சந்தை பொருளாதார நிபுணர்களும் கருதியதே இதற்கு காரணம்.<ref name=hall-mathews2008-5/> இந்திய வைஸ்ராய் லிட்டன் பிரபு அவர்களுக்கு முழு ஆதரவளித்தார். [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[புளோரன்ஸ் நைட்டிங்கேல்|ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்]] போன்ற மனிதாபிமானிகள் நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டுமென அரசாங்கத்தை வற்புறுத்தினர். ஆனால் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] போர் நடந்து கொண்டிருந்ததால், நிவாரண நிதி ஒதுக்கீட்டை உயர்த்த லிட்டன் மறுத்து விட்டார். மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுவதை எதிர்த்து நிவாரணத் தொழிலாளர்கள் [[மும்பை|பம்பாயில்]] போராட்டம் நடத்தினர்.<ref>{{Harvnb|Imperial Gazetteer of India vol. III|1907|pp=477&ndash;483}}</ref>
 
சென்னையில் சுகாதாரத் துறை ஆணையராக இருந்த கார்நிஷ் (W. R. Cornish) என்ற மருத்துவரின் பெருமுயற்சியால்<ref name=arnold-1994-7-8>{{Harvnb|Arnold|1994|pp=7-8}}</ref> மார்ச் 1877 இல் அரசாங்கம், தின நிவாரணத்தை உயர்த்த ஒப்புக் கொண்டது.<ref name=arnold-1994-7-8/> 570 கிராம் தானியமும் 53 கிராம் [[பயறு|பயறுவகைகளும்]] ([[புரதம்|புரதச் சத்துக்காக]]) வழங்கப் பட்டன.<ref>{{Harvnb|Imperial Gazetteer of India vol. III|1907|p=489}}</ref> ஆனால் அதற்குள் பல லட்சம் பேர் பட்டினியால் மாண்டிருந்தனர். சென்னை மாகாணத்தில் மட்டுமன்றி [[மைசூர்]], [[ஹைதராபாத்]] ஆகிய சமஸ்தானங்களையும், பம்பாய், ஐக்கிய மாகாணங்களையும் பஞ்சம் தாக்கியது. 1878 இல் பருவமழை திரும்பினாலும், பஞ்சத்தால் உடல் நலிந்திருந்த மக்களை [[மலேரியா]] தாக்கியது; மேலும் பல லட்சம் பேர் மாண்டனர்.<ref name=igi-III-489/> இரு ஆண்டுகளில் மொத்தம் சுமார் ஒன்பது கோடி ரூபாய் நிவாரணத்திற்காக செலவிடப்பட்டது. பஞ்சம் தாக்கிய பகுதிகளுக்கு 60 லட்சம் ரூபாய்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டன. மேலும் ஆங்கில மனிதாபிமானிகள் தனிப்பட்ட முறையில் 84 லட்சம் ரூபாய் வரை நன்கொடை வசூலித்து பஞ்ச நிவாரணத்திற்கு வழங்கினர்.<ref name=igi-III-489/> ஆனால் [[நபர்வரி]] வகையில் இத்தொகை சொற்பமானதே.<ref name = hall-matthews-1996-219/>
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாகாணப்_பெரும்_பஞ்சம்,_1876-78" இலிருந்து மீள்விக்கப்பட்டது