தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 74:
 
==அரசியல் நிலவரம்==
[[Image:MGR1977.jpg|thumb|right|200px| [[கே. ஏ. மதியழகன்|கே. ஏ. மதியழகனுடன்]] தேர்தல் பிரச்சாரத்தில் எம். ஜி. ஆர்]]
திமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியின்]] மத்திய அரசால் கலைக்கப்பட்டது. [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]] பிரகடனப்படுத்தப்பட்டதால் 1976 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய தேர்தல் ஒராண்டு தள்ளிப்போடப்பட்டது. திமுக அரசு அதன் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருந்தது. அதிமுக பல இடைத்தேர்தல்களில் வென்றிருந்தது. [[சத்தியவாணி முத்து]], [[இரா. நெடுஞ்செழியன்]], எஸ் மாதவன் போன்ற திமுக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி இருந்தனர். அதிமுக-இந்திரா காங்கிரசு கூட்டணி, 1977 ஜனவரி மாதம் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. திமுக-ஜனதா தளம் கூட்டணி தோல்வி அடைந்தது. [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்]] தேர்தல் முடிந்த ஆறு மாதங்களுக்குள் கூட்டணிகள் மாறின. சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி காணப்பட்டது. அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்டு ப்ளாக், [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்|முஸ்லீம் லீக்]] ஓரணியாகவும், இந்திரா காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட் ஓரணியாகவும் போட்டியிட்டன. திமுகவும் ஜனதா தளமும் தனித்து போட்டியிட்டன.<ref name="Duncan"/><ref name="mirchandani"/><ref name="kohli"/><ref>{{cite journal|date=26 January 1980|title=Moment of Truth for MGR|journal=[[Economic and Political Weekly]]|publisher=Economic and Political Weekly|volume=15|issue=4|pages=141–142 |url=http://www.jstor.org/pss/4368350|accessdate=15 February 2010}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1977" இலிருந்து மீள்விக்கப்பட்டது