பொய்க் கருப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவலிணைப்பு
வரிசை 7:
== அறிகுறிகள் ==
இவ்வகைப் பெண்கள் கர்ப்பத்தின் எல்லா வகை அறிகுறிகளுடனும் வருவர். அதனால் அவர்கள் சில சமயங்களில் கர்ப்பமுற்றிருப்பதாகவே தவறாக அடையாளம் காணப்படுவதுமுண்டு. மாதாந்தம் வழமையாக ஏற்படும் [[மாதவிடாய்]] இடை நிறுத்தம், காலைநேர [[குமட்டல்]], முலைகள் மிருதுவாதல், உடல் நிறை அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். வயிற்றில் இயல்புக்கு மாறாக அதிக கொழுப்பு படிவதாலோ அல்லது வயிற்றுப் பொருமலினாலோ வயிறு பெருத்திருக்கும். இப் பெண்கள் வயிற்றுள் குழந்தை அசைவது (quickening) போலக் கற்பனையும் செய்து கொள்வர். இந்நிலை ஏற்பட்டவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கு போலிப் பிரசவ வலி (psudo labour) ஏற்பட்டு மருத்துவமனைக்குப் பிரசவத்திற்காக வரவும் செய்வர்.
==காரணங்கள்==
 
இந்நிலைக்கு பல வகையான காரணங்கள் கூறப்பட்டாலும், இதற்கான காரணங்களுக்கிடையே காணப்படும் சிக்கலான தொடர்புகளால், எதையும் சரியாக உறுதிப்படுத்த முடியாத நிலையே உள்ளது <ref> AJ Giannini, HR Black. Psychiatric,Psychogenic and Somatopsychic Disorders Handbook. Garden City, NY. Medical Examination Publishing,1978. Pp.227-228. ISBN 0-87488-596-5.</ref>. இது உளவியல் சிதைவினாலேயே ஏற்படுவதாக பலரால் நம்பப்படுகிறது. கர்ப்பம் அடைவதை அதீத ஆசையுடன் எதிர்பார்க்கும் பெண்களிலோ, அல்லது கர்ப்பம் தொடர்பான அதீத பயம் கொண்ட பெண்களிலோ இந்நிலை ஏற்படலாம் என அறியப்படுகிறது. அப்படியான பெண்களில் உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் அகஞ்சுரக்கும் தொகுதியில மாற்றத்தை ஏற்படுத்தி, அதுவே உடலிலும் பிரதிபலிக்க ஆரம்பித்து விடுகிறது.
==நோயறிதல்==
பீட்டா hCG கண்டறியும் குருதிச் சோதனை அல்லது சிறுநீர்ச் சோதனை செய்து கர்ப்பமின்மையை உறுதி செய்து கொள்ளலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பொய்க்_கருப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது