கருக்கட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
=விலங்குகளில் கருக்கட்டல்=
வெவ்வேறு விலங்குகளில் கருக்கட்டலின்போது, விந்துக்கள் வேறுபட்ட முறைகளில் முட்டையை சென்றடையும். அத்துடன் பல விந்துகளில் ஒன்று மட்டும் முட்டையுடன் இணையும். கருக்கட்டலானது உள்ளான கருக்கட்டலாகவோ, அல்லது வெளியான கருக்கட்டலாகவோ இருக்கலாம். உள்ளான கருக்கட்டல் என்பது உடலுக்கு உள்ளாக விந்தும், முட்டையும் இணைவதையும், வெளியான கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியாக விந்தும், முட்டையும் இணைவதையும் குறிக்கும்.
 
மீன், ஐதரா hydra), பவளம் (coral) போன்ற, பொதுவான நீர்வாழ் விலங்குகளில் வெளியான கருக்கட்டலே நிகழ்கிறது. இங்கே ஆணிலிருந்து நீர்த்தன்மையான வெளியூடகம் ஒன்றில் வெளியேற்றப்படும் விந்துக்கள் நீந்திச் சென்று, அங்கே பெண்ணிலிருந்து வெளியேற்றப்படும் முட்டைகளுடன் இணைகின்றது. இவ்வகையான கருக்கட்டலுக்கு, விந்து இலகுவாக உட்புகக் கூடியதாக, முட்டையானது மெல்லிய வெளிமென்சவ்வைக் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன் விந்தானது வீரியமான அசையும் திறன் கொண்டதாக இருப்பதுடன், வெளிச் சூழலை எதிர் கொள்வதால், மிக அதிகளவில் விந்துக்கள் உருவாக்கப்படும் நிலையிலும் இருக்க வேண்டும். இவ்வாறான கருக்கட்டலில் உடல்திரவங்களின் தொடர்பு குறைவாக இருப்பதனால்,
[[தொற்றுநோய்]]களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். அத்துடன் தேர்வற்ற புணரிகளின் இணைவால், மரபியல் வேறுபாடு அதிகளவில் உருவாகும் சந்தர்ப்பமும் ஏற்படும்.
 
உள்ளான கருக்கட்டலில், பொதுவாக விந்தும், முட்டையும் இணைவது பெண் விலங்குகளின் உடலின் உள்ளேயே நடைபெறும். இவ்வகை கருக்கட்டலில், கருக்கட்டலின் நிகழ்தகவு அதிகமாக இருப்பதுடன், புணரிகள் வீணாதலும் குறைக்கப்படும். அத்துடன் புணரிகளை தேர்வு செய்ய முடிவதுடன், முட்டைக்கான அதிககால பாதுகாப்பும் கிடைக்கும். கோழி போன்ற தடித்த வெளி மென்சவ்வைக் கொண்ட முட்டைகளை உருவாக்கும் விலங்குகளில், முட்டைகள் உடலைவிட்டு வெளியேறிய பின்னர் விந்துக்கள் உட்புகுவது கடினமாதலால், முட்டைகள் உடலினுள் இருக்கையிலேயே, மென்சவ்வை தடிப்பற்றதாக இருக்கும் நிலையிலேயே கருக்கட்டல் நிகழ்ந்துவிடும்.
 
=மனிதரில் கருக்கட்டல்=
 
"https://ta.wikipedia.org/wiki/கருக்கட்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது