வி. கனகசபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
 
இவர் பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்து வைத்திருந்ததுடன் அவற்றைப் படித்து ஆய்வுகளும் செய்து வந்தார். இதனால் சிறந்த தமிழ் அறிவு பெற்றிருந்ததுடன், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளில் அவருக்கு நல்ல அறிவும் இருந்தது. தமிழின் பெருமையைப் பிற மொழியினரும் அறிந்து கொள்ளும்படி தனது ஆய்வுகளைக் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் ஆங்கிலத்தில் எழுதினார். சென்னையில் இருந்து வெளிவந்த "[[மதராஸ் ரிவியூ]]" என்னும் ஆங்கில இதழொன்றில் தமிழர் வரலாறு பற்றி தொடர்ச்சியாக இவர் எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் தலைப்பில் ஆங்கில நூலாக வெளிவந்தது. இதன் மூலம், தமிழ் வரலாறு குறித்து முதன் முதலில் முறையான காலவரலாற்று ஆய்வை நிகழ்த்தியவர் என்ற பெருமையைக் கனகசபைப்பிள்ளை பெறுகிறார்<ref>சுவெலபில், கமில். 1997. பக். 104</ref>. [[கா. அப்பாத்துரை]]யார் இந்நூலை ''ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்'' என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தார். பிற்காலத்தில், உ. வே. சாமிநாதையரின் பதிப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காகத் தன்னிடம் இருந்த பழம் தமிழ் நூல் ஏடுகளைச் சாமிநாதைருக்குக் கொடுத்து உதவினார்<ref>சம்பந்தன், மா. சு. 1997. பக். 261</ref>
 
 
தமிழ் வரலாறு குறித்து முதன் முதலில் முறையான காலவரலாற்று ஆய்வை நிகழ்த்தியவர் கனகசபைப்பிள்ளையே ஆவார்<ref>சுவெலபில், கமில். 1997. பக். 104</ref>.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வி._கனகசபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது