மனித வள மேலாண்மை முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
பணியாளரின் வரலாறுகள், திறமைகள், செயலாக்கத் திறன்கள், சாதனைகள் மற்றும் ஊதியம் ஆகிய தரவுகளை அறிந்து வைத்திருப்பது மனித வள நிருவாகத்தின் முதன்மையான வேலையாகும். இந்த நிருவாக வேலைகளை எளிமையாக வகைப்படுத்தி வேலைப் பளுவைக் குறைக்க, நிறுவனங்கள் பல நடைமுறைகளை மின்னணு முறைக்கு மாற்றி விட்டன.
 
ஒருங்கிணைந்த ஒரு மனித வள மேலாண்மை முறைமையை உருவாக்க மனித வளத் துறை நிருவாகப் பணியாளர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர்களை சார்ந்துள்ளனர். 1980களின் இறுதியில் "[[வாங்கி-வழங்கன்]]" பயன்பாட்டு முறை உருவாகும் வரை, பெரிய அளவில் தரவு செயலாக்கங்களைக் கையாளும் மெயின்பிரேம் (மூலப்பரப்பற்சட்டம்) கணினி மூலம் பல மனித வள செயல்பாடுகள் இணைக்கப் பெற்றன. இது பெரும் மூலதனத்தை இதற்கு செலவிடக் கூடிய நிறுவனங்களுக்கே கைகூடியது. அதன்பின் [[வாங்கி-வழங்கன்]], [[பயன்பாட்டு சேவை வழங்குநர்]] மற்றும் சேவையாக மென்பொருள் அல்லது [[எஸ்ஏஎஸ்]](SaS) ஆகிய மென்பொருட்களின் வருகைக்குப் பின் இத்தகைய முறைமைகளின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது.
 
மனித வள மேலாண்மை முறைமைகளின்முறைமைகளில் பின்வருவன அடங்கியிருக்கும்:
 
# சம்பளப் பட்டியல்
வரிசை 24:
# பணியாளர் சுய-சேவை
'''சம்பளப் பட்டியல் நிரல்கூறு''' பணியாளர் வருகைப் பதிவு, சம்பளப் பிடித்தங்கள் மற்றும் வரிகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு ஊதியம் வழங்கலை நிர்வகிக்கிறது. இதற்கான தரவுகள் மனித வளத் துறை மற்றும் நேரம் பதிவு செய்யும் நிரல்கூறுகளில் இருந்து பெறப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பணியாளரின் சம்பளம் தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டு அதற்கான காசோலைகளை நிதித் துறை அலுவலர்கள் கணக்கை சரிபார்த்து வழங்குவார்கள். அனைத்து ஊழியர் தொடர்பான பரிவர்த்தனைகளும் இந்த நிரல்கூறில் இருக்கும். அத்துடன் நடப்பு நிதி மேலாண்மை அமைப்புகளுடனும் இது ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும்.
'''வேலை நேரம்''' பணியாளரின் இயல்பான பணி நேரத்தையும் வேலையையும் ஒருங்கிணைக்கிறது. முன்னேறிய நிரல் கூறுகள் ஏராளமான பயன்பாட்டு அம்சங்களைக் கொண்டுள்ளன. செலவு கணக்கிடல் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு இது பிரதானமாகப் பயன்படுகிறது.
வரிசை 49:
'''பயிற்சி நிரல்கூறு''' ஒரு நிறுவனப் பணியாளரின் பயிற்சி மற்றும் முன்னேற்ற முயற்சிகளை நிர்வகிப்பதற்கான ஒரு முறைமையை வழங்குகிறது. இந்த முறைமை (தனியாகப் பயன்படுத்தப்படுகையில் [[கற்றல் மேலாண்மை முறைமை]] என்றும் அழைக்கப்படுகிறது) பணியாளர்களின் கல்வி, தகுதி, மற்றும் திறமைகளை அளவிடுவதற்கும் அவர்களுக்கு எந்த மாதிரியான பயிற்சிகள், புத்தகங்கள், குறுவட்டுகள், வலைத்தளம் சார்ந்த பயிற்சிகள் அவசியம் என்பதை மதிப்பிடுவதற்கும் மனித வளத் துறைக்கு உதவுகிறது. இதற்குத் தகுந்தாற்போல், தேதி வாரியான தனிப்பட்ட பயிற்சி முகாம்கள் மற்றும் வகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு, சரியான ஆலோசகர்களை பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்து, இந்த முறைமைக்குள்ளேயே பலரின் திறமைகளை நன்கு நிர்வகிக்கலாம். மிகவும் திறம்பட்ட உழைப்பு மேலாண்மை முறைமைகள் மேலாளர்களுக்கு இந்த வேலைகளை நிர்வகிப்பதில் பேருதவி புரிகின்றன.
 
'''பணியாளர் சுய சேவை நிரல்கூறு''' ஒரு பணியாளருக்கு அவர் குறித்த மனித வளத் துறை தரவுகளை அறிந்து கொள்ளவும், மற்றும் முறைமை மூலமாக சில பரிவர்த்தனைகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் வழி வகுக்கிறது. தங்கள் வருகைப் பதிவு குறித்து மனித வளத் துறை அதிகாரிகளிடம் மட்டுமல்லாது இந்த முறைமையிலும் ஊழியர்கள் வினாக்கள்அறிந்து எழுப்பலாம்கொள்ளலாம். மனித வளத் துறையினருக்கு சுமையேற்றாமல், மிகுதி நேரப் பணிக்கு மேற்பார்வையாளர்கள் இந்த நிரல்கூறின் வழி ஒப்புதலளிக்க முடியும்.
பல நிறுவனங்கள் பாரம்பரிய செயல்பாடுகளைக் கடந்து மிகவும் மேம்பட்ட மனித வள மேலாண்மைத் தகவல் முறைமைகளைப் பயன்படுத்துகின்றன. பணியாளர் தெரிவு, வேலைவாய்ப்பு, செயல்திறன் மதிப்பீடு, பணியாளர் நலன் ஆராய்தல், உடல் நலம், பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இந்த முறைமைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மற்றும் பல நிறுவனங்கள் இந்த அத்தனை அம்சங்களையும் கொண்ட விண்ணப்பதாரர் பின்தொடர் முறைமையை தங்களது முறைமையுடன் சேர்த்து அமர்த்தி பயன்படுத்திக் கொள்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மனித_வள_மேலாண்மை_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது