விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 120:
 
மொழிபெயர்ப்பாளர்களுக்கு மொழிபெயர்க்கும் விஷயங்கள் பற்றி சரிவர புரியவில்லை என்பதற்கு இப்போது லேட்டஸ்டாக “திருத்தம் முடிந்ததாக” அறிவிக்கப்பட்டிருக்கும் [[பேச்சு:மத்திய புலனாய்வு நிறுவனம்|கட்டுரையைப் பாருங்கள்]]. இப்படி செய்து விட்டு “எத்தனை முறை” திருத்துவது என்று கேட்பவர்களை என்ன செய்ய?--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 17:05, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
 
=== எனது கருத்து ===
 
:: தரத்தில் பிரச்சனை என்றால் யாராலும் ஏற்றுக்கொள்வது இயலாததே. நாமும் நம்மாலான சிறிய மாற்றங்களைச் செய்யலாம். மதிப்பிடப்பட்டக் கட்டுரைகளில் உள்ள பிழைகளை மதிப்பிடும் போதே மாற்றியிருந்தால் அந்த கட்டுரைகளிலிலிருந்து விக்கிப்பயனர்களின் நடையை அறிந்திருக்கலாம் என்பது எனது கருத்து. நாமும் அதை மொழிப்பெயர்ப்பாளர்கள் பின்பற்றும்படி செய்யலாம். இந்த கட்டுரைகளை எழுதியது தமிழர்களே என்று நினைக்கும் போது மன வருத்தத்தை அளிக்கத்தான் செய்கிறது.
 
இந்தத் திட்டத்தில் அறிந்த சில பிரச்சனைகளும் எனது கருத்தும்
 
1) கூகிள் மொழிப்பெயர்ப்புக் கருவிகளால் வந்த சிவப்பு இணைப்பு பிரச்சனை: இது ஒரு பிரச்சனையே இல்லை. சிவப்பு இணைப்பு என்பது பயனருக்கு அந்தக் கட்டுரை விக்கியில் இல்லை உருவாக்குங்கள் என்று சொல்லும் ஒரு வழியாகும். இதை யாராலும் மறுக்க முடியாது. சுந்தர் மற்றும் ரவி கூறியவாறு அப்படி ஒரு முழு வார்த்தை இல்லை எனும்போது( எ.கா. இலக்கண மாற்றத்தின் காரணமாக தமிழ் -> தமிழில் என மாறும்போது) தமிழில் இது பிரச்சனையை அளிக்கவே செய்கிறது; இது முதலில் எங்களுக்கு விக்கியிலுள்ள | பற்றித் தெரியாததால் நேர்ந்தது. பிறகு சுந்தர் எடுத்துக்கொண்ட தனிப்பட்ட முயற்சியின் காரணமாக அதை ஏற்கனவே உள்ள கட்டுரைகளிலிருந்து அகற்ற முடிந்தது. சில மொழிபெயர்ப்பாளர்களும் | கொண்டு கைமுறையாகத் திருத்தி இந்த பிரச்சனையில் உதவினார்கள் என்பதை மறுக்கஇயலாது. கருவியிலுள்ள இந்தப் பிரச்சனையானது இப்பொழுது சரிசெய்யப்பட்டுவிட்டதால் இனி இப்பிரச்சனை எழ வாய்ப்பில்லை.
 
2) வார்ப்புரு பிரச்சனையும் வார்ப்புரு உருவாக்கியதன் காரணமும்: வார்ப்புருவையும் சிவப்பு இணைப்பையும் சரிசெய்தால் மொழிப்பெயர்ப்பாளர்கள் வேறு பிரச்சனையைப் பற்றி நினையாமல் அதில் உள்ள இலக்கண மற்றும் கருத்து வெளிப்பாட்டிலுள்ள பிரச்சனையை சரிசெய்வதில் தங்களது நேரத்தை செலவிடலாம் என்பதற்காக மட்டுமே. விக்கியை குப்பையாக்குவதற்காக அல்ல. அந்த வார்ப்புருக்களின் பெயர்களைத் தமிழில் எழுதவேண்டும் என்று அறியாதிருந்தது ஒரு பிழையே. அதன் நோக்கம் விக்கப்பயனர்கள் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட ஆர்வத்தினால் அந்தத் தகவலையும் தமிழில் தரலாம் என்பதே.
 
3) கட்டுரைத் தேர்வு: தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைப் பற்றிய பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. சுந்தரிடம் ஏற்கனவே விளக்கியது போல இவை கூகிள் தேடலில் இந்தியாவிலிருந்து வந்தத் தேடல் வினவல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்திய பயனர்கள் பார்க்க விரும்பும் தகவல்களை இணையத்தில் முடிந்த மட்டும் இந்திய மொழிகளில் தருவதே இதன் நோக்கம். இனி ஏற்கனவே அறிவித்த படி எல்லா கட்டுரைகளையும் கூகிள் விக்கியிடம் முன்வைக்கும். அதில், கட்டுரையின் ஆங்கிலத் தலைப்பு, வார்த்தைகளின் எண்ணிக்கை, ஏற்கனவே இது தமிழ் விக்கியில் உள்ளதா போன்ற தகவல்களைக் கொண்டிருக்கும். தமிழ் விக்கி மதிப்பீட்டாளர்கள் கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கலாம் மேலும் அதற்கான தலைப்பையும் பரிந்துரைக்கலாம். விக்கிப்பயனரும் தங்களுக்கு வேண்டிய கட்டுரைகளை முன்வைக்கலாம். இதன் மூலம் தேவையற்றதாக விக்கிப் பயனர் நினைக்கும் கட்டுரை தமிழில் வர வாய்ப்பில்லை.
 
- முதலில் கட்டுரைகள் மாதம் ஒருமுறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால், கட்டுரையில் சில வேறுபாட்டைக் காணமுடிந்தது. வாரம் ஒருமுறை மொழிபெயர்ப்பாளரின் தகுதியை அறிந்து அதற்கேற்ப அவர்களுக்கு தருவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனை எழ வாய்ப்பில்லை. மேலும் மொழிபெயர்ப்பாளர்களின் தகவல் மற்றும் மொழிபெயர்ப்பு செய்தவுடன் அதற்கான இணைப்பு வழங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் விக்கிப்பயனர் எல்லா தகவல்களையும் ஒரே தாளில் காணலாம். மேலும் இந்த மொழிபெயர்ப்பாளர் சரியில்லை என்று அவர்களின் ஒரு சில கட்டுரைகளிலிருந்து சொல்ல ஏதுவாக இருக்கும். அதன் படி நாங்களும் அவர்களை மாற்ற ஏற்பாடு செய்யலாம்.
- ஏற்கனவே ரவியிடம் தொலைப்பேசியில் தெரிவித்தது போல இப்போது மதிப்பிட்ட கட்டுரையிலிருந்து சில நல்ல மொழிபெயர்ப்பாளர்களைத் தெரிவித்தால் அவர்களை மதிப்பீட்டாளர்களாக்கி கட்டுரையின் தரத்தை உறுதிசெய்யலாம்.
- வாரம் ஒரு முறை என்பதால் எனக்கும் அதிக நேரத்தை விக்கியில் செலவிடமுடியும். என்னாலான சில திருத்தங்களையும் நான் செய்து வருகிறேன். புதிய கட்டுரைகளைத் தொடங்கினாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பழைய கட்டுரைகளைத் தொடர்ந்து திருத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
- எல்லோரும் எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை. விக்கிப்பயனருமே பலவற்றில் பிற விக்கிப்பயனர்களின் கருத்தை ஏற்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பலரின் கருத்திலிருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது நன்றே. இது முற்றிலும் எனது கருத்தே! அன்னப்பறவையைப் போல எனது கருத்தில் உள்ள நல்லதை எடுத்து தவறு ஏதும் இருப்பின் அதை விடுக்குமாறு வேண்டுகிறேன்.
- நான் ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் பயின்றவள் என்பதால் கணினியில் பட்டம் பெற்ற போதிலும் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இப்பணியில் உள்ளேன் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். சில கூகிள் பொறியாளர்களும் இக்கட்டுரைகளைப் பார்வையிட ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
Return to the project page "கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு".