விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 161:
 
:: சோடாபோட்டில், உங்கள் கருத்துக்களுடன் பெரிய மாறுபாடு இல்லை. "ஜியோவன்னி பிராஸ் (1996 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி பிறந்தார்), என்று அனைவராலும் நன்கு அறியப்படும் டின்டோ பிராஸ் ஒரு இத்தாலிய திரைப்பட இயக்குநர்." என்று மொழி பெயர்த்தது பிழையா? --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 04:37, 28 ஆகஸ்ட் 2010 (UTC)
 
 
==எனது நிலைப்பாடு==
தற்போது சுமார் ஒரு வருட காலமாக நாம் இந்த கூகுள் கட்டுரைகளுடன் போராடி வருகிறோம். புள்ளி விவரங்களை பார்த்தால் அனைத்து தர அளவீட்டு அடிப்படையிலும் சுமார் 50 சதவீத கட்டுரைகளே மொழி பெயர்ப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக ரவி குறிப்பிட்டுள்ளார். இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம், இத்தர அளவீடுகளை இணைத்துப் பார்த்தல், சரியாக மொழிபெயர்ப்படாத கட்டுரைகளில் இலக்கண பிழைகளும், சரியான கலைசொற்களும் இல்லாமல் இருத்தல், வாசிக்கத் தூண்டும் எழுத்து நடை இல்லாமை என பல சிக்கல்கள் இருக்கலாம்! இப்படி சீர்தூக்கி பார்த்தால் இதில் ஒரு கட்டுரைகள் கூட தேராது என்பது உண்மை! மேலும் மொழிபெயர்பாளர்கள் இயற்றியுள்ள கட்டுரைகளில் ஒரு குறைந்த அளவிலான கட்டுரையே இங்கு திருத்தப்பட்டு இருக்கிறது அதிலும் பல சிக்கல்கள். இக்கட்டுரைகளினால் த.விக்கு எவ்வித பயனும் இல்லை மற்றும் இதை யாரும் படிக்க மாட்டார்கள் (படிக்கவே முடியாது!) என்பது என்னுடைய கருத்து. வெறும் எண்ணிக்கைகளுக்கு வேண்டுமெனில் இவை உதவலாம். மேலும் இக்கட்டுரைகளை திருத்த விக்கி பயனர் யாரும் ஆர்வம் காட்டவில்லை! என்னுடைய சொந்த அனுபவத்தில் சுந்தரவன காடுகள் கட்டுரையை உரை திருத்த முயன்று தோற்றேன்! மொழிபெயர்பாளர்கள் என்ன எழுதியுள்ளார் என முதலில் புரிந்துகொள்ள வேண்டும், பின் எழும் பல நூறு ஐயங்களை களைய ஆங்கில கட்டுரையை படிக்கவேண்டும். அதன் பின் தமிழ் காட்டுரையை ஒவ்வொரு வரியாக மாற்ற வேண்டும். ஒரு கட்டுரையை திருத்தும் நேரத்தில் இரண்டு மூன்று புதிய கட்டுரைகளை எழுதிவிடலாம்.
 
நாம் தமிழிற்கு நம்மால் முடிந்து பங்களிப்பாகவும் மற்றும் நம்மிள் அனைவருக்கு தமிழில் எழுத படிக்க விருப்பம் இருப்பதாலேயே நமக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்களில் தவிக்கு பங்களிக்கிறோம். தவி இருப்பதும் தமிழில் கட்டுரைகள் இயற்றி மற்றவர்களை சொன்றடைய மட்டுமேயின்றி மொழி பெயர்ப்பாளர்களுக்கு பணி கொடுக்க அன்று! நாம் மொழி பெயர்ப்பு கட்டுரைகளுக்கு தர அளவை கொஞ்சம் கொஞ்சமாக சற்று உயர்த்தினால், இனிமேல் கட்டுரைகளே எழுத முடியாது என்ற நிலைக்கு மொழி பெயர்ப்பாளர்கள் வந்தால், ஏற்கனவே இயற்றப்பட்டுள்ள கட்டுரைகளை யார் சரி செய்வது? கூகுளா? மற்றும் இக்கட்டுரைகளின் தரமேம்பாட்டிற்காக பலரும் தங்களின் நேரத்தை செலவிட்டுள்ளார்களே (குறிப்பாக ரவி இதில் பல மணி நேரங்களை செலவிட்டுள்ளார்), இவர்களின் இந்நேரத்திற்கான பலன் என்ன? மொழி பெயர்ப்பாளர்களின் வாழ்வியல் சிக்கலை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அதற்காக தவி தரம் குறைவதை பார்த்துகொண்டு இருக்க இயலாது.
 
தற்போது ஏற்பட்டுள்ள நம் அனுபவ அடிப்படையில் இம்மொழி பெயர்ப்பு முறை நாம் நினைக்கு தரத்தை தற்போது அளிக்க இயலாது என்னது நன்கு புலனாகியுள்ளது. அதனால் உடனே இம்மொழி பெயர்ப்பை நிறுத்த வேண்டும் என்பது என் நிலை! வெறும் ஆயிரம் படிக்க இயலா கட்டுரைகளுடன் இருக்கட்டும், அவை பத்தாயிரம் ஆக வேண்டாம்.
Return to the project page "கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு".