"விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நாம் தமிழிற்கு நம்மால் முடிந்து பங்களிப்பாகவும் மற்றும் நம்மிள் அனைவருக்கு தமிழில் எழுத படிக்க விருப்பம் இருப்பதாலேயே நமக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்களில் தவிக்கு பங்களிக்கிறோம். தவி இருப்பதும் தமிழில் கட்டுரைகள் இயற்றி மற்றவர்களை சொன்றடைய மட்டுமேயின்றி மொழி பெயர்ப்பாளர்களுக்கு பணி கொடுக்க அன்று! நாம் மொழி பெயர்ப்பு கட்டுரைகளுக்கு தர அளவை கொஞ்சம் கொஞ்சமாக சற்று உயர்த்தினால், இனிமேல் கட்டுரைகளே எழுத முடியாது என்ற நிலைக்கு மொழி பெயர்ப்பாளர்கள் வந்தால், ஏற்கனவே இயற்றப்பட்டுள்ள கட்டுரைகளை யார் சரி செய்வது? கூகுளா? மற்றும் இக்கட்டுரைகளின் தரமேம்பாட்டிற்காக பலரும் தங்களின் நேரத்தை செலவிட்டுள்ளார்களே (குறிப்பாக ரவி இதில் பல மணி நேரங்களை செலவிட்டுள்ளார்), இவர்களின் இந்நேரத்திற்கான பலன் என்ன? மொழி பெயர்ப்பாளர்களின் வாழ்வியல் சிக்கலை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அதற்காக தவி தரம் குறைவதை பார்த்துகொண்டு இருக்க இயலாது.
 
தற்போது ஏற்பட்டுள்ள நம் அனுபவ அடிப்படையில் இம்மொழி பெயர்ப்பு முறை நாம் நினைக்கு தரத்தை தற்போது அளிக்க இயலாது என்னது நன்கு புலனாகியுள்ளது. அதனால் உடனே இம்மொழி பெயர்ப்பை நிறுத்த வேண்டும் என்பது என் நிலை! வெறும் ஆயிரம் படிக்க இயலா கட்டுரைகளுடன் இருக்கட்டும், அவை பத்தாயிரம் ஆக வேண்டாம்.--[[பயனர்:Karthickbala|கார்த்திக்]] 05:05, 28 ஆகஸ்ட் 2010 (UTC)
2,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/584027" இருந்து மீள்விக்கப்பட்டது