"மார்ட்டின் ஸ்கோர்செசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
 
ஸ்கோர்செஸியின் முந்தைய படமான ''தி ஏஜ் ஆஃப் இன்னொசென்ஸ்'' போன்று, 1995ஆம் ஆண்டின் பிரம்மாண்டமான ''காசினோ'' வும் ஒழுங்கு முறைமைகளுக்கு உட்பட்ட ஒரு ஆடவனின் வாழ்க்கை முன்னறிய இயலாத சக்திகளின் வருகையால் சீர்குலவைதை இறுக்கமான முறையில் குவிமையப்படுத்துவதாக அமைந்திருந்தது. இயக்குனர் முந்தைய படத்தில் தமது பாணியை மாற்றியமைத்துக் கொண்டிருந்தமையால் குழம்பியிருந்த அவரது ரசிகர்களுக்கு, இத்திரைப்படம் வன்முறைக் குண்டர்களைப் பற்றியதாக அமைந்திருந்தது பிடித்தமானதாக இருந்தது. இருப்பினும், விமர்சன ரீதியாக, ''காசினோ'' வைப் பற்றிய கண்ணோட்டம் கலவையாகவே இருந்தது. இதற்குப் பெருமளவிலான காரணம், இது அவரது முந்தைய ''குட்ஃபெல்லாஸ்'' திரைப்படத்தின் பாணியைப் பெருமளவில் ஒத்திருந்ததேயாகும்.
உண்மையில், அவரது முந்தைய பல படங்களின் உருவகங்களும், பொறிகளும் ஏறத்தாழ மாறுபாடு ஏதுமின்றி மீண்டும் இத்திரைப்படத்தில் காணப்பட்டன. ராபர்ட் டி நீரோ மற்றும் ஜோன் பெஸ்சி ஆகிய இருவரும் இதில் நடிக்க வைக்கப்பட்டதும் பெஸ்சி மீண்டும் ஒரு முறை கட்டுப்பாடற்ற மனப்பிறழ்வு கொண்டவராக நடித்ததும் இதனை வெளிப்படையாகச் சுட்டின. ஷரோன் ஸ்டோன் தமது செயற்திறனுக்காக சிறந்த நடிகைக்கான அகாடமி விருதுக்கான பரிந்துரைப்பைப் பெற்றார்.
 
இதன் படப்பிடிப்பின்போது, மேசைகள் ஒன்றினில் விளையாடும் சூதாடியாக பின்னணிப் பாத்திரம் ஒன்றில் ஸ்கோர்செஸி நடித்தார். அச்சமயம் துணை நடிகர்களுக்கு இடையில் மெய்யான ஒரு போக்கர் விளையாட்டு நடந்து கொண்டிருந்ததாகவும், பந்தயப் பணமாக $2000 பணயம் வைக்கப்பட்டு இருந்ததாகவும் வதந்திகள் பலவும் இருந்தன. ஃபிலிம் கமென்ட்டின் 90ஆம் ஆண்டுகளின் சிறந்த திரைப்படங்களுக்காக ஒதுக்கப்பட்டதான ஜனவரி இதழில் ''இன்ஸிட்யூட் லுமியிரி'' யின் தியெர்ரி ஃப்ரெமௌக்ஸ் இவ்வாறு கூறினார்: ''"இப்பத்தாண்டுகளின் மிகச் சிறந்த ஆனால் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட படம் "''காசினோ'' "'' ." மைக்கேல் வில்மிங்டனோ, ''குட்ஃபெல்லாஸ்'' மற்றும் '''காசினோ''' ஆகிய இரண்டையுமே "''வன்முறை மற்றும் பாலுணர்வை ஒயிலாகச் சித்தரிக்கும் பாணியின் மிகச் சிறந்த சிகரங்கள்'' " என வர்ணித்தார்.<ref>{{cite web|url=http://www.filmlinc.com/fcm/1-2-2000/decade.htm |title=Film Comment |publisher=Filmlinc.com |date= |accessdate=2010-03-03}}</ref>
1,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/584122" இருந்து மீள்விக்கப்பட்டது