மார்ட்டின் ஸ்கோர்செசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
 
1972ஆம் ஆண்டு இரண்டாம்-தரத் திரைப்படத் தயாரிப்பாளரான ரோஜர் கோர்மன் என்பவருக்காக தாழ்நிலை-காலத்து நிலையைச் சாதகமாக்கும் கருப்பொருள் கொண்டதான ''பாக்ஸ்கார் பெர்த்தா'' என்னும் திரைப்படத்தை ஸ்கோர்செஸி உருவாக்கினார். இத் தயாரிப்பாளரே ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா, ஜேம்ஸ் காமரூன் (James Cameron) மற்றும் ஜான் சய்லெஸ் போன்ற இயக்குனர்கள் தங்கள் தொழில் வாழ்வைத் துவக்க உதவி புரிந்தவர். பொழுதுபோக்குத் திரைப்படங்களைச் சொற்ப நிதி மற்றும் நேரம் கொண்டு தயாரிக்க இயலும் என்பதை ஸ்கோர்செஸிக்குக் கற்பித்தவர் கோர்மனே ஆவார். இது, இளம் இயக்குனரான ஸ்கோர்செஸி பல சவால்களைச் சந்தித்து ''மீன் ஸ்ட்ரீட்ஸ்'' திரைப்படத்தைத் தயாரிக்க ஏதுவானது. இப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, பிறருக்கான தொழிற் திட்டங்களில் ஈடுபடுவதைத் விடுத்து தாம் தயாரிக்க விரும்பும் திரைப்படங்களில் ஈடுபடுமாறு காசவெட்ஸ் அவரை ஊக்கினார்.
 
பாலைன் கேயெல் என்னும் செல்வாக்கு மிக்க திரை விமர்சகரின் பெரும் ஆதரவுடன் ''மீன் ஸ்ட்ரீட்ஸ்'' , ஸ்கோர்செஸி, டி நீரோ மற்றும் கெயிட்டல் ஆகியோருக்கு கட்டுடைத்த வெற்றியாக அமைந்தது.
இந்தக் கால கட்டத்தில், ஸ்கோர்செஸியின் முத்திரை என்பது- மிகு ஆண்மையின் வெளிப்பாடுகள், இரத்தம் தோய்ந்த வன்முறை, குற்றம் மற்றும் மீட்சி பற்றிய கத்தோலிக்கக் கருத்தாக்கங்கள், வெறுப்பு நிறைந்த நியூயார்க் பகுதிகள் (உண்மையில், மீன் ஸ்ட்ரீட்ஸ் திரைப்படத்தின் பெரும்பகுதி லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளிலேயே படம் பிடிக்கப்பட்டது வேறு விஷயம்), விருவிருப்பான படத்தொகுப்பு மற்றும் ஒரு ராக் ஒலித்தடம் ஆகியவற்றைக் கொண்டதாக- மிக அழுத்தமாகப் பதிந்து விட்டது. இத்திரைப்படம் புதுமை மிகுந்திருப்பினும், அதன் மருட்சியான சூழல், ஆவணப் படத்தினை ஒத்த நடை மற்றும் வெறுப்பூட்டும் வீதிகளுக்குப் பொருந்துவதான யதார்த்தமான இயக்கம் ஆகியவை இயக்குனர்கள் காசவெட்ஸ், சாமுவேல் ஃப்யூல்லர் மற்றும் ஆரம்ப காலத்து ஜீன்-லுக் கோடார்ட் (Jean-Luc Godard) ஆகியோரின் பாணியில் அமைந்திருந்தது.<ref>{{cite news | url = http://www.washingtonpost.com/wp-dyn/articles/A99967-1991Nov24.html | title = Scorsese, Master Of The Rage | publisher = Washington Post | date = 1991-11-24 | first = Hal | last = Hinson}}</ref> (உண்மையில், இளம் இயக்குனரான ஸ்கோர்செஸியின் திறமைக்கு ''பாக்ஸ்கார் பெர்த்தா'' திரைப்படம் மிகவும் தகுதிக் குறைவானது என உணர்ந்த காசவெட்ஸ் அளித்த மிகுந்த ஊக்கத்துடனேயே இப்படம் நிறைவடைந்தது).<ref name="scorsese_on_dvd"></ref>
 
1974ஆம் வருடம் எல்லன் பர்ஸ்டின் என்னும் நடிகை ''அலைஸ் டஸின்ட் லிவ் ஹியர் எனிமோர்'' என்னும் திரைப்படத்தில் தன்னை இயக்குவதற்காக ஸ்கோர்செஸியைத் தேர்ந்த்தெடுத்தார். இத்திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான அகாடமி விருது வென்றார். சிறந்த முறையில் பாராட்டுப் பெற்றாலும், ஒரு பெண்ணின் பாத்திரத்தை மையப்படுத்துவதனால், இயக்குனரின் திரை வாழ்க்கையில் இத்திரைப்படம் ஒரு முரணாகவே உள்ளது தமது இனம்சார் வேர்களைக் கண்டறிய லிட்டில் இத்தாலிக்குத் திரும்பிய ஸ்கோர்செஸி அடுத்து, தமது பெற்றோர், சார்லெஸ் மற்றும் காதரைன் ஸ்கோர்செஸி ஆகியோரைச் சித்தரிப்பதான ''இத்தாலியஅமெரிக்கன்'' என்னும் ஆவணத்தைத் தயாரித்தார்.
 
==== ''டாக்ஸி டிரைவர்'' ====
"https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_ஸ்கோர்செசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது