12,103
தொகுப்புகள்
(→இயங்கமைவு: Lycodon - ஓலைப்பாம்பா எனச்சரி பார்க்க வேண்டும்) |
சி (→வரலாறு: உ.தி.) |
||
== வரலாறு ==
[[படிமம்:H.W. Bates.JPG|thumb|75px|இவ் உய்வுமுறையைக் கண்டறிந்த என்ரி வால்டர் பேட்டிசு]]
[[என்ரி வால்டர் பேட்டிசு]] (''Henry Walter Bates'') (1825–1892) என்ற [[இங்கிலாந்து|ஆங்கில]] [[இயற்கை வரலாறு|இயற்கையியலாளர்]] [[ஆல்ஃவிரடு அரசல் வாலேசு]] என்ற அறிஞருடன் இணைந்து [[தென் அமெரிக்கா]]வில் உள்ள [[அமேசான் மழைக்காடு]]களில் 1848-ம் ஆண்டுவாக்கில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். 1852-ல் வாலேசு நாடு திரும்பினார். ஆனால், பேட்டிசு அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருந்து கள ஆய்வுகளை மேற்கொண்டார். தன் ஆய்வுக்காக [[இத்தோமினே]] (குமட்டல் சுரப்பி கொண்டவை), [[நீளிறகிகள்]] (Heliconiinae) ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான [[பட்டாம்பூச்சி]] இனங்களைச் சேகரித்து வந்தார். அவற்றின் தோற்ற ஒற்றுமை அடிப்படையில் ஒழுங்கபடுத்த முயன்றபோது பல முரண்பாடுகளைக் கண்டார். வெளித்தோற்ற அளவில் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்கு ஒற்றுமை கொண்டிருந்த இனங்களைப் பார்த்தால் அவை ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பண்புகளைக் கொண்ட இனங்களாக இருந்தன. இங்கிலாந்து திரும்பியதும் அவரது அவதானிப்பின் அடிப்படையில் அமைந்த ஒப்புப்போலிப் பண்புக் கருத்தை முன்வைத்து இலண்டன்
பேட்டிசு நெருங்கிய மரபுத் தொடர்பு இல்லாத இனங்களிடையே அமைந்துள்ள தோற்ற ஒற்றுமை ஒரு [[கோண்மா எதிர்ப்புத் தகவமைவு]] என்ற கருத்தை முன்வைத்தார். மேலும், சில இனங்கள் வியத்தக்க அளவுக்கு பளிச்சிடும் நிறங்களையும் கொண்டு, ஏதோ தன்னைப் பிடிக்க வரும் கோண்மாக்களைச் சீண்டிப் பார்ப்பது போல மெதுவாகப் பறப்பதையும் சுட்டிக் காட்டினார். இத்தகைய பட்டாம்பூச்சிகள் பறவைகளுக்கும் பிற பூச்சித்தின்னிகளுக்கும் உண்ணுதற்கு உகந்தவையாக இல்லாமல் இருக்கக் கூடும் என்று அவர் கருதினார். இதே அடிப்படையிலேயே இவ்வினங்களைப் போன்ற போலித்தோற்றம் கொண்ட பிற இனங்களும் தமது நிற அமைப்பைப் பெற்றிருக்கலாம் என்ற வாதத்தை அவர் முன்வைத்தார். அந்தப் போலிகள் குமட்டல் தன்மையையோ நச்சுத்தன்மையையோ பெற்றிருக்க வேண்டியதில்லை.
|