தினமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
(தினமணியின் 75வது ஆண்டில் (பவழ விழா ஆண்டில்) தற்போது எழுதப்பட்ட தலையங்கம். இதில் தினமணி பிறந்த கதை முழுமையாகத் தரப்பட்டுள்ளது.)
 
===பவழ விழா தலையங்கம்===
 
பவழ விழா காணும் முதல் தமிழ் தினசரி என்கிற பெருமைக்கு உரித்தாகிறது உங்கள் "தினமணி'. மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளன்று உதயமான நாளிதழ் என்கிற பெருமைக்குரிய "தினமணி', ஒவ்வொரு தமிழனின் உணர்வையும், உள்ளக் குமுறலையும், ஒவ்வோர் இந்தியனின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் பிரதிபலிப்பதுடன் நின்றுவிடாமல், மனித நேயம், மக்களாட்சித் தத்துவம், உலக சகோதரத்துவம் போன்ற லட்சியங்களுக்காகவும் தன்னைத் தொடர்ந்து அர்ப்பணிக்கும் என்று நமக்கு நாமே உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணமிது.
 
’தினமணி' பவழ விழா கொண்டாடுகிறது என்பதல்ல பெருமை. நாள் தவறாமல் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை, சமுதாயத்தில் காணும் நிலைபிறழ்ந்த செய்கைகளை, நல்ல பல மாற்றங்களைத் தொடர்ந்து 75 ஆண்டுகளாகப் பதிவு செய்து வருகிறது என்பதுதான் "தினமணி'யின் தலையாய சமுதாயப் பங்களிப்பு. நிலத்தில் யார்க்கும் அஞ்சாமல் துணிந்து தனது கருத்துகளை எடுத்துரைத்து, தவறுகளை இடித்துரைத்து, சிறப்புகளைப் புகழ்ந்துரைத்து "தினமணி' ஆற்றிவரும் சமுதாயத் தொண்டு, தொடரும்... தொடர்ந்தேயாக வேண்டும்...
 
தினமணியின் முதலாவது ஆசிரியரான டி .எஸ். சொக்கலிங்கமும், நீண்டநாள் ஆசிரியரான ஏ.என். சிவராமனும் போட்டுத் தந்திருக்கும் அடித்தளத்தில் உங்கள் "தினமணி' இன்றும் தொடர்கிறது என்பதும், தொடரும் என்பதும் நூற்றாண்டை நோக்கி நடை போடும் வேளையில் நாம் வாசகர்களுக்கு வழங்கும் உறுதிமொழி.
 
ஒவ்வொரு நாளும் "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிற மனோநிலையுடன், ஓர் ஆவணப் பதிவை தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் வைக்கிறோம் என்கிற கவனத்துடன் "தினமணி' உருவாக்கப்படுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 1934-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள், "அறிமுகம்' என்கிற முதல் தலையங்கத்தில் அன்றைய ஆசிரியர் டி .எஸ். சொக்கலிங்கம் எதையெல்லாம் "தினமணி' நாளிதழின் லட்சியமாகக் குறிப்பிட்டிருந்தாரோ, அந்த லட்சிய வேட்கை தொடர்கிறது, அவ்வளவே.
 
பவழ விழா கொண்டாடும் இந்த நாளில், பாரதியாரின் முதலாம் நினைவுநாளன்று வெளியான முதலாவது "தினமணி' நாளிதழின் தலையங்கத்தில் இருந்து சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
"தமிழில் பல தினசரிப் பத்திரிகைகள் இருக்கின்றன. மற்றுமோர் பத்திரிகை தோன்றுவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அறிகுறியென்று சிலர் நினைப்பர். பெரும்பாலோர் ""தினமணி''யின் போக்கைப் பார்த்து முடிவு செய்யலாம் என்று நடுநிலைமை வகித்திருப்பர்.
 
போர்க்காலத்தில், யுத்த வீரர்களுக்குப் பக்கபலமான சேவகர்கள் பலர் வேண்டும். தொத்து நோய் பரவும்பொழுது, நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் ஊழியர்கள் வேண்டும். பஞ்ச காலத்தில் ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கும் தொண்டர்கள் வேண்டும். ஓர் அபூர்வ சுதந்திரப் போர் நடந்து வருகின்றது. அதன் நடுவில் ஏற்படும் அற்ப வெற்றிகளால் மயங்காமலும் சிறிய தோல்விகளால் தளராமலும் பாரத தேசம் விடுதலை அடையும் வரையில் தமிழ் மக்களைப் போற்றியும் தேற்றியும் ""தினமணி'' துணைபுரியும்.
 
எல்லா வியாதிகளிலும் மனோவியாதியே மிகக் கொடியது. நமது மக்களின் மனத்தில் அடிமைத்தனம் குடிகொண்டிருக்கின்றது. நமது பெரியாரிடத்தும் சிறியாரிடத்தும் அடிமைப் புத்தி அகன்றபாடில்லை. அதை அடியோடு அழித்து தமிழ் மக்களை மானிகளாகச் செய்வதற்குத் "தினமணி' ஓயாது பாடுபடும்.
 
இந்திய ஜனங்களில் பெரும்பாலோர் அழியாப் பஞ்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இதற்குப் பல காரணங்களுண்டு. அவற்றுள் முதன்மையானது முதலாளிகளும், ஜமீன்தார்களும் நமது தொழிலாளர்களின் உழைப்பினால் உண்டாகும் செல்வத்தை எல்லாம் பிடுங்கிக்கொண்டு தங்கள் ஆடம்பரங்களுக்காக அழிப்பதுதான். இம்முறை மாறி நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதி தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய புதியதோர் சமூகம் உருவாக்கப்பட வேண்டும்.
 
தேச சேவையும், மனித சேவையும் தமிழ்நாட்டிற்கு இன்றியமையாதனவென்று கருதியே ""தினமணி'' இன்று உதயமாகின்றது. மேற்கூறிய கொள்கைகளைச் சிறிதும் நழுவவிடாமல் பாதுகாப்பதற்கு தேசசேவையில் தேர்ந்த ஒரு இளைஞர் கூட்டம் அதிக ஊதியத்தை எதிர்பாராமல் இவ்வேலையை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழ் மொழியின் மறுமலர்ச்சியின் அடையாளம் பாரதியார்தான். பாரத நாட்டின் இதர மாகாணங்களிலெல்லாம் தேசீய எண்ணம் பொங்கியெழுந்து கொண்டிருந்த சமயத்தில் தமிழகம் மட்டும் உணர்ச்சி குன்றியிருந்ததைக் காணச் சகியாது தமிழர்களைத் தட்டியெழுப்பிய முன்னணி வீரர்கள் சிலரே. அவர்களுள் பாரதியாரே முக்கியமானவர்.
 
நவ யுகத்தின் தூதராகத் தோன்றிய கவிஞரை அவரது காலத்தில் தமிழகம் முற்றிலும் உணர்ந்து கொள்ளவில்லை. ""செல்வம் எத்தனையுண்டு புவி மீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு'' என்று கம்பீரமாகப் பாடிய அந்தக் கவிஞனை வறுமையில் வாடுமாறு விட்டுவிட்டது. இனியாவது கவிஞனின் திருநாமம் என்றென்றும் பசுமையாக தமிழர் சந்ததியிடை வாழ்வதாக! சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப் பித்தரான சுப்பிரமணிய பாரதியாரின் வருஷாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திர தாகத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் பிறந்திருக்கும் ""தினமணி''யை தமிழ் மக்கள் மனமுவந்து வரவேற்பார்கள் என்பது எமது பூர்ண நம்பிக்கை.''
 
அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. "தினமணி' நூற்றாண்டு விழாவை நோக்கிப் பீடு நடை போடுகிறது..
 
==நடுநிலை நாளேடு==
 
"https://ta.wikipedia.org/wiki/தினமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது