பேர்டினண்ட் டி சோசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
 
 
பேர்டினண்ட் மொங்கின் டி சோசர் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் 1857 ஆம் ஆண்டு பிறந்தார். இளமையிலேயே குறிப்பிடத்தக்க திறமைகளும் அறிவுத்திறனும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஓராண்டு ஜெனீவாப் பல்கலைக் கழகத்தில் [[இலத்தீன்]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[சமசுக்கிருதம்]] ஆகிய மொழிகளையும் பிற பல்வேறு பாட நெறிகளையும் கற்றர். பின்னர் 1876 ஆம் ஆண்டில் [[லீப்சிக் பல்கலைக்கழகம்|லீப்சிக் பல்கலைக்கழகத்தில்]] படிப்பைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தனது 21 ஆவது வயதில், ''இந்திய-ஐரோப்பிய மொழிகளில் தொடக்கநிலை உயிரெழுத்து முறைமை பற்றிய ஆய்வுக் கட்டுரை'' என்னும் தலைப்பிலான நூல் ஒன்றை வெளியிட்டார். பின்னர் ஓராண்டு [[பேர்லின்|பேர்லினில்]] கல்விகற்றார். அப்பஓது சமசுக்கிருத மொழியியல் சார்ந்த தலைப்பொன்றில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி 1880 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். இதன் பிறகு விரைவிலேயே அவர் [[பாரிசு]]க்குச் சென்றார். அங்கே [[கோதிக் மொழி|கோதிக்]], [[பழைய உயர் செருமன் மொழி|பழைய உயர் செருமன்]] ஆகிய மொழிகளிலும் இடையிடையே வேறு பாடங்களிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பாரிசில் 11 ஆண்டுகள் கற்பித்தபின்னர், 1891 ஆம் ஆண்டில் ஜெனீவாவுக்குத் திரும்பினார். இதன் பின்னர் தனது வாழ்க்கைக்காலம் முழுவதும் ஜெனீவாப் பல்கலைக் கழகத்தில் சமசுக்கிருதம், இந்திய-ஆரியம் ஆகியவற்றுக்கு விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1907 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகப் பொது மொழியியல் தொடர்பில் விரிவுரை ஆற்றத் தொடங்கினார். 1911 ஆம் ஆண்டுவரை இதைத் தொடர்ந்த சோசர். 1913 ஆம் ஆண்டு காலமானார்.
 
[[பகுப்பு:மொழியியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேர்டினண்ட்_டி_சோசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது