இரசினிகாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
31 ஜூலை 2010
சி தானியங்கிமாற்றல்: hi:रजनीकान्त; cosmetic changes
வரிசை 12:
| spouse = லதா ரஜினிகாந்த்
| homepage = http://www.rajinikanth.com/
| notable role = ''[[தில்லு முல்லு]]வில'' இந்திரன்/சந்திரன்<br />''[[பாட்சா]]வில'' மாணிக்கம் பாட்சா<br />''[[சந்திரமுகி]]யில்'' சரவணன்<br />''[[சிவாசி]]யில்'' சிவாசி
| academyawards =
| emmyawards =
வரிசை 21:
'''ரஜினிகாந்த்''' என்று அனைவராலும் அறியப்படும் '''சிவாஜி ராவ் காயக்வாட்''' (மராட்டியில்:रजनीकांत/शिवाजीराव गायकवाड :ஶிவாஜீராவ் காயகவாட் ) ஒரு புகழ்பெற்ற [[தமிழ்|தமிழ்த்]] [[திரைப்படம்|திரைப்பட]] நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை ''தலைவர்'' என்றும் ''சூப்பர் ஸ்டார்'' என்றும் அழைக்கின்றனர்.
 
== இளமை ==
ரஜினிகாந்த், [[டிசம்பர் 12]] [[1950]] அன்று [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடகத்தில்]] ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். [[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் [[பேருந்து]] நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல [[மேடை நாடகம்|மேடை நாடகங்களில்]] பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.
 
== திரைப்படங்களில் ==
நடிகராகும் ஆவலுடன் [[சென்னை]] வந்த ரசினிகாந்து, ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு [[கே. பாலசந்தர்|கே. பாலச்சந்தர்]] இயக்கிய ''அபூர்வ ராகங்கள்'' திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த ''மூன்று முடிச்சு'' (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு ''16 வயதினிலே'', ''காயத்ரி'' போன்ற படங்களில் [[வில்லன்|வில்லனாக]] நடித்தார். பின்னர் ''புவனா ஒரு கேள்விக்குறி'', ''முள்ளும் மலரும்'', ''ஆறிலிருந்து அறுபது வரை'' போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். ''பில்லா'', ''போக்கிரி ராசா'', ''முரட்டுக் காளை'' போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. ''தில்லு முல்லு'' திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல [[நகைச்சுவை]] நடிகர் என்பதை ரசினிகாந்து நிரூபித்தார். ரசினிகாந்து நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ''சுரீ ராகவேந்திரா''. இப்படம் [[இந்து சமய]] புனிதரான [[சுரீ ராகவேந்திரர்|ராகவேந்திரரின்]] வாழ்க்கை பற்றியது.
 
வரிசை 34:
ரசினிகாந்தின் திரைப்படங்களுக்கு [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு [[சப்பான்|சப்பானிலும்]] பல ரசிகர்கள் உள்ளனர்.
 
== அரசியல் தொடர்பு ==
1990களில் ரசினிகாந்து நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 [[தமிழ் நாடு|தமிழக]] சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த [[அ.இ.அ.தி.மு.க]] கட்சிக்கு எதிராக இவர் [[தொலைக்காட்சி|தொலைக்காட்சியிலும்]] பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது. எனினும், இக்காரணி தேர்தல் புள்ளியியலாளர்களால் அறுதியிட்டுக் கூறப்படவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில், ரசினிகாந்து எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய [[நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்]] தேர்தல்களில் [[பாரதிய சனதா கட்சி|பா.ச.க]] தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரசினிகாந்து அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார்.
ரசினி 03நவ08 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார்.ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்,அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாக கோரினர்.
 
== குடும்பம் ==
16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். பின்னர் இருவரும் ஐசுவர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்களைப் பெற்றனர். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு இளம் தமிழ் திரைப்பட நடிகரான [[தனுச்|தனுசை]] மணந்தார்.
{{jhg}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://rajinifans1.blogspot.com/ ஆனந்த விகடனில் 2005 மே-சூன் மாதங்களில் ரசினிகாந்து பற்றி வெளி வந்த தொடர்]
* [http://rajinifans.com/ ரசினிகாந்து ரசிகர்கள் நடத்தும் வலைத்தளம்]
* [http://www.rajinikanth.com/ ரசினிகாந்து ரசிகர்களின் மற்றோர் வலைத்தளம்]
 
{{Template group
வரிசை 53:
{{சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது}}
}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
 
வரி 58 ⟶ 59:
[[en:Rajinikanth]]
[[fr:Rajinikanth]]
[[hi:रजनीकांतरजनीकान्त]]
[[ja:ラジニカーント]]
[[kn:ರಜನೀಕಾಂತ್]]
"https://ta.wikipedia.org/wiki/இரசினிகாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது