யூ.எசு. ஓப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை சேர்ப்பு
வரலாறு
வரிசை 19:
 
நான்கு பெருவெற்றித் தொடர் டென்னிசு போட்டிகளில் இங்கு மட்டுமே கடைசித் தொகுப்பில் சமநிலைமுறிவு (final-set tiebreaks) கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
==வரலாறு==
இப்போட்டி ஆரம்ப காலத்தில் சமூகத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தது. இப்போட்டி 1881 ம் ஆண்டு [[றோட் தீவு|றோட் தீவிலுள்ள]] நியூபோர்ட் நகரின் நியூபோர்ட் காசினோவில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கு ஆண்கள் ஒற்றையர் போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. முதல் ஆண்டு மட்டுமே அமெரிக்க டென்னிஸ் சங்கத்தின் உறுப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். 1884 முதல் 1911 வரை சவால் முறையை கடைபிடித்தது, அதன்படி நடப்பு வெற்றியாளர் அடுத்த ஆண்டு இறுதி போட்டிக்கு எப்போட்டியிலும் விளையாடாமலேயே தானாக தகுதி பெற்றவர் ஆகிடுவார். 1915ல் [[நியூயார்க்|நியூயார்க்கின்]] பாரஸ்ட் ஹில் பகுதியிலுள்ள மேற்கு பக்க டென்னிஸ் சங்கத்துக்கு இப்போட்டி நடக்குமிடம் நகர்த்தப்பட்டது. 1921 முதல் 1923 வரை இப்போட்டி [[பிலடெல்பியா]] நகரிலுள்ள செருமன்டவுன் கிரிக்கெட் சங்கத்தில் விளையாடப்பட்டது. பின் மீண்டும் 1924ம் ஆண்டு பாரஸ்ட் ஹில் பகுதிக்கு திரும்பியது.
 
அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து 1887ம் ஆண்டு பிலடெல்பியா கிரிக்கெட் சங்கத்தில் அமெரிக்க பெண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டது, இரண்டு ஆண்டுகள் கழித்து 1889ல் பெண்களுக்கான இரட்டையர் போட்டி நடத்தப்பட்டது. அமெரிக்காவின் முதல் கலப்பு இரட்டையர் போட்டி பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் நடக்கும் போது அதனுடன் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான இரட்டையர் போட்டி 1900ம் ஆண்டு நடத்தப்பட்டது.
இந்த பந்தயங்கள் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தனி தனியாக நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையே போட்டி வைக்கப்பட்டு தேசிய வாகையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
1968ல் திறந்த போட்டிகள் காலம் தொடங்கியவுடன் 5 போட்டிகளும் அமெரிக்க டென்னிஸ் திறந்த போட்டிகளுடன் இணைக்கப்பட்டன. இப்பந்தயங்கள் பாரஸ்ட் ஹில் பகுதியிலுள்ள மேற்கு பக்க டென்னிஸ் சங்கத்தில் நடத்தப்பட்டன. 1968ல் இருந்து இப்போட்டியில் தொழில் முறை ஆட்டக்காரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அந்த ஆண்டு 96 ஆண்களும் 63 பெண்களும் கலந்துகொண்டார்கள், அப்போட்டியில் அளிக்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை 100,000 அமெரிக்க டாலர்களாகும்.
 
1970 ம் ஆண்டில் யூ.எஸ். ஓப்பன் [[கிராண்ட் சிலாம்]] பந்தயங்களிலேயே முதல் முறையாக சமநிலைமுறிவு முறையை பயன்படுத்தியது. இப்போதும் யூ.எஸ். ஓப்பனிலேயே இறுதி ''செட்டில்'' (set) சமநிலைமுறிவு முறை பின்பற்றப்படுகிறது. மற்ற மூன்று [[கிராண்ட் சிலாம்]] பந்தயங்களில் இம்முறை இல்லை. அமெரிக்க டென்னிஸ் திறந்த போட்டிகள் புல் தரையிலேயே ஆடப்பட்டன, 1975ம் ஆண்டு களிமண் தரைக்கு ஆட்டம் நடக்கும் பாரஸ்ட் ஹில் விளையாட்டரங்கம் மாறியது. மூன்று ஆண்டுகள் கழித்து 1978ல் பாரஸ்ட் ஹில் பகுதியில் இருந்து தற்போது ஆட்டம் நடக்கும் பிளசிங் மெடோஸ் பகுதிக்கு விளையாட்டரங்கம் மாறியதும் இதன் செயற்கை தரையை பயன்படுத்தி ஆட்டம் நடைபெறுகிறது.
 
ஜிம்மி கூனர்சு என்பவரே யூ.எஸ். ஓப்பனின் மூன்று ஆடுதளத்திலும் வெற்றிபெற்றவராவார். கிரிஸ் ஈவன்ட் என்பவரே இரண்டு ஆடுதளங்களில் வெற்றி பெற்ற பெண் ஆவார்.
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/யூ.எசு._ஓப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது