விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 132:
 
::::: இதே கருத்தை முன்பு அதில் தொடர்புள்ள ஒருவரிடம் கூறி உள்ளேன். அவர்கள் உலகளாவிய தமிழ் மாணவர்களுக்கு ஒரு இணைய வளமாக அமைய இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஒரு இணையச் சமூகத்தை கட்டமைக்க தவறி விட்டார்கள். அங்கு பயனர் ஊடாடம் இல்லை. உரையாடல்கள் இல்லை. வலை 2.0 அவர்கள் கேள்விப்படவே இல்லை போல் இருக்கிறது. வலை 3.0 ம் வந்து விட்டது. ஒரு பக்க வழங்கலாகவே இருக்கிறது. எனினும் தற்போது இந்த மூலங்கள் திறந்து விடப்பட்டதால், தேடு பொறுகளில் சிக்குகின்றன. ஆனால் பெரும்பான்மையானவை பண்டை இலக்கியங்களாகவே உள்ளன. அறிவியல் தகவல்களோ, தலித்தியல், நாட்டாரியல் தகவல்களோ அரிது. ஆனால் தமிழ்க் கலைக்களஞ்சியம் இணையத்துக்கு வந்தது ஒரு நல்ல தொடக்கம். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 15:04, 11 செப்டெம்பர் 2010 (UTC)
நான் அவர்களுக்கு அறியத் தருகிறேன். இயக்குநராக உள்ள முனைவர் நக்கீரன் அவர்களிடம் கூறுகின்றேன். அவரும் இங்கே பயனராகப் பதிவு செய்து பங்களித்தவர் (பங்களிக்க விரும்புபவர்). இல்லை என்று கூறுவதினும் இப்படிச் செய்யலாம் என்று கூறுவோமே. தமிழ் விக்கிப்பீடியாவுக்கும், தமிழ் விக்சனரிக்கும் பெரும் நல்லூட்டு தருபவர்கள். முன்னாள் தமிழ் இணையப்ப் பல்கலைக்கழகம் என்று இருந்து இப்பொழுது தமிழ் இணையக் கல்விக்கழகமாக உள்ள இந்த நிறுவனம், தமிழ்விக்கிப்பீடியாவின் உறவுத்திட்டமான விக்சனரிக்கு 1,32,746 சொற்கள் அடங்கிய ஆறு தொகுதிகளில் உள்ள கலைச்சொற்களைக் கொடையாக அளித்துள்ளனர். நம் முயற்சிகளைப் பெரிதும் பாராட்டி உடனுழைப்பவர்கள். இப்படியெல்லாம் இல்லாவிட்டாலும் நாம் வளர்முகமாக நம் கருத்துகளை வைப்பது நல்லது என்பது என் கருத்து. அவர்களுக்கு அவர்கள் தலைவர்கள் இடும் ஆணையும், வழிகாட்டுதலும் முதன்மையானது அல்லவா, ஆகவே நிலவரத்தை நன்கு அறியாமல் நாம் கருத்துரைக்க வேண்டாமே. --[[சிறப்புபயனர்:Contributions/99.237.20.227செல்வா|99.237.20.227செல்வா]] 17:4851, 12 செப்டெம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது