பிரித்தானியச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழாக்கம்
வரிசை 51:
 
==விளைவுகள்==
[[File:Piloci 303.jpg|thumb|right|பிரிட்டனுக்காக போரிட்ட [[போலந்து]] நாட்டு விமானப்படையின் 303வது ஸ்குவாட்ரன் விமானிகள்]]
லுஃப்ட்வாஃபேவினால் பிரிட்டனின் வான்வெளியில் வானாதிக்க நிலையை அடைய முடியாததால், திட்டமிடப்பட்டிருந்த ஜெர்மனியின் [[சீலயன் நடவடிக்கை|பிரிட்டன் படையெடுப்பு]] கைவிடப்பட்டது. நாசி போர் எந்திரத்தை எதிர்த்து ஒரு நாடு தப்பிப் பிழைக்கமுடியுமென்பதை பிரிட்டனின் இந்த வெற்றி உலகுக்கு உணர்த்தியது. இவ்வெற்றிக்குப் பின்னர், பிரிட்டனுக்கு உதவுவது பற்றியான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] நிலை பிரிட்டனுக்கு சாதகமாக மாறியது. மேற்குப் போர்முனையில் இன்னும் ஒரு எதிரி மீதமிருக்கும்போதே [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)| கிழக்குப் போர்முனை]] நோக்கி ஹிட்லர் தன் கவனத்தை திசை திருப்ப வேண்டியதாயிற்று. இதனால் அடுத்த நான்காண்டுகள் [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனுடனான]] போரில் அவரால் ஜெர்மனியின் முழுபலத்தை பிரயோகிக்க முடியவில்லை. பிரிட்டனை தளமாக பயன்படுத்திக் கொண்ட [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகள்]] ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த [[ஐரோப்பா]] மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி தொல்லை கொடுத்து வந்தன. [[1944]]ல் பிரான்சு மீது நேச நாடுகள் [[நோமண்டி சண்டை|படையெடுக்கவும்]] பிரிட்டன் தளமாக உதவியது. இதனால் இருமுனைகளிலும் போரிடும் நிலைக்கு ஜெர்மனி தள்ளப்பட்டது. எனவே பிரிட்டன் சண்டையில் ஜெர்மனியின் தோல்வி [[போரியல் மூல உபாயம்|பெரும் போரியல் உபாயத்]] தவறாகக் கருதப்படுகிறது.
 
பிரிட்டன் சண்டையில் லுஃப்ட்வாஃபேவைத் தோற்கடித்த பிரிட்டிஷ் விமானிகள் பிரிட்டன் ஆட்சியாளர்களாலும், மக்களாலும் பெருமளவில் கொண்டாடப்படுகின்றனர். சர்ச்சில் நாடாளுமன்றத்துக்கு ஆற்றிய உரையொன்றில் ”நமது வரலாற்றில் இதற்கு முன்னர் இதுபோல இத்தனை மக்கள், ஒரு சிலருக்கு (விமானிகள்) கடமைப்பட்டிருக்கும் நிலை இருந்ததில்லை” என்று அவர்களைப் பாராட்டினார். அன்று முதல் பிரிட்டன் சண்டையில் ஈடுபட்ட பிரிட்டிஷ் விமானிகள் “அந்த ஒரு சிலர்” (The Few) என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் நாள் பிரிட்டனில் “பிரிட்டன் சண்டை தினமாக” அனுசரிக்கப்படுகிறது.
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானியச்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது