சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
==பின்புலம்==
1858 இல் [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய் கலகத்தின்]] பிறகு சென்னை மாகாணம், [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|கிழக்கிந்தியக் கம்பெனியின்]] கட்டுப்பாட்டிலிருந்து பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடிக் கட்டுப்பாடின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், [[தொடர்வண்டி|புகைவண்டிகள்]], தானிய [[ஊக வாணிகம்]], புதிய [[பணப் பயிர்|பணப் பயிர்கள்]], ஏற்றுமதி என பல நவீன முறைகளை இந்தியாவில் அறிமுகப் படுத்தினர். இதனால் உள்ளூர்ச் சந்தைகள் நலிவடைந்து, தானியங்களின் விற்பனை பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்டது. 1876 ஆம் ஆண்டு [[எல் நீனோ-தெற்கத்திய அலைவு|எல் நீனோ பருவநிலை மாற்றத்தால்]], [[தக்காணப் பீடபூமி]] முழுவதும் [[வடகிழக்கு பருவமழை|பருவமழை]] பொய்த்தது. உணவு தானியங்களின் விளைச்சல் பெருமளவு குறைந்தது. உணவு தானிய உற்பத்தி குறைந்தாலும், ஏற்றுமதி குறையவில்லை. [[சந்தைப் பொருளாதாரம்|சந்தைப் பொருளாதாரத்தில்]] அசையா நம்பிக்கை கொண்டிருந்த காலனிய ஆட்சியாளர்கள், எற்றுமதியைஏற்றுமதியை தடை செய்து, பற்றாக்குறையைப் போக்க விரும்பவில்லை. பதுக்கல் பரவலாகி, உணவு தானியங்களின் விலை கட்டுக்கடங்காமல் போனதால், விவசாயிகள் அடுத்த வருடத்திற்கான விதை நெல்லை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் அடுத்த வருடம் பயிரிடப்பட்ட நில அளவு வெகுவாகக் குறைந்து, உணவுப் பற்றாக்குறை தீவிரமடைந்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியமெனக் கருதப்படும் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] கூட பட்டினிச் சாவுகள் மிகுந்தன என்று பஞ்ச நிவாரண குழு உறுப்பினர் வில்லியம் டிக்பி தனது ''ஃபேமைன் கேம்பைன்ஸ் இன் சவுத் இந்தியா'' என்ற நூலில் தெரிவித்துள்ளார்.<ref>{{Harvnb|Davis|2001|p=25-36}}</ref><ref>{{Harvnb|Roy|2006|p=361}}</ref>
 
==பஞ்சமும் நிவாரணமும்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாகாணப்_பெரும்_பஞ்சம்,_1876-78" இலிருந்து மீள்விக்கப்பட்டது