யூ.எசு. ஓப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை தி
சிNo edit summary
வரிசை 16:
}}
 
'''அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டிகள்''' அல்லது '''யூ.எசு. ஓப்பன்''' (US Open), ஆண்டுதோறும் நடைபெறுகிறநடைபெறுகின்ற, "கிராண்ட் சிலாம்" (Grand Slam) என்றழைக்கப்பட்ட, பெருவெற்றித் தொடர் [[டென்னிசு]] போட்டிகளில் ஒன்றாகும். 1881ஆம் ஆண்டு, முதலில் ஆண்கள் ஒற்றையர் போட்டியுடன் துவங்கிய, யூ.எசு.தேசிய சாதனையாளர் போட்டியின் தற்கால வடிவமே, இப்போட்டியாகையால் உலகின் மிகப் பழமையான டென்னிசுப் போட்டியாகக் கருதப்படுகிறது. 1987ஆம் ஆண்டிலிருந்து, பெருவெற்றித் தொடர் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்போட்டி அவற்றில், ஆண்டில் கடைசியிலும் நான்காவதாகவும் நடைபெறும் சாதனைப்போட்டியாக விளங்குகிறது. [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] [[குயீன்சு]] பகுதியில் அமைந்த [[பில்லி சீன் கிங்]] (Billie Jean King) தேசிய டென்னிஸ்டென்னிசு மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிற இப் பந்தய விளையாட்டில் குறைந்தது 600 ஆண்களும் பெண்களும் போட்டியிடுகின்றனர். [[ஆகஸ்ட்|ஆகத்து]] இறுதியிலும் [[செப்டம்பர்]] துவக்கத்திலும் இரண்டு வாரங்களில் நடைபெறும் இப்போட்டிகள் ஒற்றையர் (ஆண்), இரட்டையர் (ஆண்கள்), ஒற்றையர் (பெண்), இரட்டையர் (பெண்) , மற்றும் இருபாலர் இரட்டையர் பிரிவுகளில் நடைபெறுகின்றன. தொழில்நெறியகளும்தொழில்நெறியர்களும் (professional), தனியார்வநெறியர்களும் (அமெச்சூர்களும்) கலந்துகொள்ள முடியுமாதலால் இது "திறந்த போட்டிகள்" என வழங்கப்படுகிறது.
 
நான்கு பெருவெற்றித் தொடர் டென்னிசு போட்டிகளில், இங்கு மட்டுமே கடைசி ஆட்டத்தொகுப்பில் சமநிலைமுறிவுத் தீர்வு (final-set tiebreaks) கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
==வரலாறு==
இப்போட்டி தொடக்கக் காலத்தில், குமுகத்தில் (சமூகத்தில்) உயர் மட்டத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தது. இப்போட்டி 1881 ம் ஆண்டு [[றோ தீவு|றோட் தீவிலுள்ள]] (Rhode Island) நியூப்போர்ட் நகரின் நியூப்போர்ட் காசினோவில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கு ஆண்கள் ஒற்றையர் போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. முதல் ஆண்டு மட்டுமே அமெரிக்க டென்னிசுச் சங்கத்தின் உறுப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். 1884 முதல் 1911 வரை அறைகூவல் முறையை (challenge system) கடைபிடித்தது, அதன்படி நடப்பு வெற்றியாளர் அடுத்த ஆண்டு இறுதி போட்டிக்கு எப்போட்டியிலும் விளையாடாமலேயே தானாக தகுதி பெற்றவர் ஆகிடுவார். 1915ல் [[நியூயார்க்|நியூயார்க்கின்]] பாரஃசுட்டு ஃகில் (Forrest Hill) பகுதியிலுள்ள மேற்கு பக்க டென்னிசு சங்கத்துக்கு இப்போட்டி நடக்குமிடம் நகர்த்தப்பட்டது. 1921 முதல் 1923 வரை இப்போட்டி [[பிலடெல்பியா]] நகரிலுள்ள செருமன்டவுன் கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றாது. பின் மீண்டும் 1924ம் ஆண்டு பாரஃசுட்டு ஃகில் பகுதிக்கு திரும்பியது.
 
அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து 1887ம் ஆண்டு பிலடெல்பியா கிரிக்கெட் சங்கத்தில் அமெரிக்க பெண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டது, இரண்டு ஆண்டுகள் கழித்து 1889ல் பெண்களுக்கான இரட்டையர் போட்டி நடத்தப்பட்டது. அமெரிக்காவின் முதல் கலப்பு இரட்டையர் போட்டி பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் நடக்கும் போது அதனுடன் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான இரட்டையர் போட்டி 1900ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த பந்தயங்கள் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தனி தனியாக நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையே போட்டி வைக்கப்பட்டு தேசிய வாகையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/யூ.எசு._ஓப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது