எங்கள் அண்ணா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சித்திக் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: விஜய்காந்தின் தந்தைக்கு இரண்டு மனைவியர். இரண்டாவது மனைவி ப...
(வேறுபாடு ஏதுமில்லை)

07:49, 16 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

விஜய்காந்தின் தந்தைக்கு இரண்டு மனைவியர். இரண்டாவது மனைவி பற்றி ஒரு சிலருக்கு அரசல் புரசலாய்த் தான் தெரியும். முதல் மனைவியின் மகன் (விஜய்காந்த்) காதலித்த பெண்ணை நிச்சயம் செய்யப் போகும் போது, அந்தப் பெண்ணை மணக்க ஆசை கொண்ட அவளது மாமன் மகன், இரண்டாம் மனைவி பற்றிய பேச்சை எடுத்து அந்த இரண்டாம் மனைவியையும் அழைத்து வந்து விடுகிறான். இரண்டாவது மனைவியோ, கணவரின் மானம் போகாமல் இருக்க, அவர் தன் கணவர் இல்லை என்று சொல்லி விடுகிறாள். இரண்டாவது மனைவியின் மகன், இதனால் அதிர்ச்சி+கோபம் அடைந்து ஊரை விட்டே ஓடிப் போகிறான்.

அந்த மாமன் மகன், இதற்கிடையில் அந்தப் பெண்ணின் அப்பாவைக் கொலை செய்து விட்டு, பழியை விஜய்காந்த் அப்பா மீது போடுகிறான். விஜய்காந்தும் அதை நம்பி விட, அந்தப் பெண் வாழ்வில் முன்னேற கடன் பெற ஜாமீன் கையெழுத்துப் போட, சொத்தெல்லாம் அபகரிக்கப் படுகிறது. தன் தந்தை தவறு செய்யவில்லை என்று அவர் உணரும் போது, அந்தப் பெண் நம்புவதில்லை.. காதல் உடைந்து போகிறது.. அவள் தன் மாமன் மகனையே மணந்து கொள்கிறாள். இடையில் தந்தையின் இரண்டாவது மனைவியும் இறந்து விடுகிறாள். அவருக்கு ஒரு மகளும் உண்டு. மகன் ஓடிப் போக முதல் மனைவி குடும்பமே காரணம் என்று அவருக்கு கோபம் இருப்பதால் அதைச் சொல்லியே மகளை வளர்க்கிறாள்.. இதனால், விஜய்காந்த், அநாதையாகி விடும் தன் தங்கை சொர்ணமால்யாவை, தான் இன்னாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே படிக்க வைத்து வளர்க்கிறார்.

விஜய்காந்தின் மாமா மகனான பிரபுதேவா ஒரு ஜொள்ளு பார்ட்டி. அவரைத் திருத்த விஜய்காந்துடன் தங்க வைக்கிறார்கள். பக்கத்து வீட்டு ஹாஸ்டலில் இருக்கும் சொர்ணமால்யாவை டாவடிக்கிறார். முதலில் விலகிப் போகும் சொர்ணாவும் பிறகு ஏற்றுக் கொள்கிறார்.

இதற்கிடையில் சம்பந்தமில்லாமல் நமிதா ஒரு கேரக்டராக உள்ளே நுழைகிறார். ஒரு சந்தர்ப்பத்தில், விஜய்காந்தை காதலிக்க வைக்கிறேன் என்று சபதம் போட்டு அதற்காக சில பல வேலைகள் செய்கிறார். 'என்னடா இது புதுக் குழப்பம்' என்று நாம் யோசிக்கும் போதே, அவர், விஜய்காந்த் காதலித்த பழைய பெண்ணின் தங்கை என்று தெரிய வருகிறது.

சொர்ணமால்யாவுக்கு, விஜய்காந்த் தான் அண்ணன் என்றும் தெரிய வருகிறது. பழைய கோபங்களை மறந்து அன்புக்கு ஏங்கும் தங்கையாக அவர் உருக, அண்ணன் பாசம் பொழிய எல்லாம் நன்மையாகப் போகும் வேளையில், ஊரை விட்டு ஓடிப் போன பழைய அண்ணன் திரும்பி வருகிறார். விஜய்காந்தின் பழைய காதலியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு அவர் விஜய்காந்துக்கு எதிராக சில வில்லத்தனங்கள் செய்கிறார். தங்கையைப் பிரிக்கிறார். வேறு இடத்தில் திருமணம் செய்ய முயற்சிகள் நடக்கிறது. (பழைய காதலியின் தம்பியுடன்..)

கடைசியில் பழைய காதலி, அவளது கணவர் ஆகியோரின் கெட்ட எண்ணம் புரிந்து கொண்டு, அண்ணன், விஜய்காந்தை, "நீ தான் எங்க ரெண்டு பெருக்குமே அண்ணன்" என்று ஜோக்கடிப்பதுடன் படத்தை ஒருவழியாக முடிந்தது

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கள்_அண்ணா_(திரைப்படம்)&oldid=594432" இலிருந்து மீள்விக்கப்பட்டது