"ஐரோ வலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,000 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
(விரிவாக்கம்)
'''யூரோ சோன்''' ([[ஆங்கிலம்]]: Eurozone; {{audio|En-us-Eurozone.ogg|ஒலிப்பு}}) எனப்படும்''' யூரோ பிரதேசம்''', [[யூரோ]] நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட 16 [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]] (ஐ. ஒ) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”யூரோ ஏரியா” ([[ஆங்கிலம்]]: Euro Area) என்றழைக்கப்படுகிறது.
==தோற்றம்==
[[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] (ஐ. ஓ) பல உறுப்பினர் நாடுகள் [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] பிற்பகுதியிலிருந்தே பொருளியல் மற்றும் வணிக விஷயங்களில் கூட்டுறவுடன் செயல்பட்டுவந்தன. ஐ.ஓ நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க என்று நீண்ட நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”யூரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” ([[ஆங்கிலம்]]: Euro Convergence Criteria) என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் [[1992]]ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்ததில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:
மாஸ்ரிக்ட் ஒப்பந்தம்
 
1. '''பணவீக்க விகிதம்'''
ஒரு நாட்டின் [[பணவீக்கம்]], ஐ. ஓ நாடுகளில் குறைந்த பணவீக்கத்தை கொண்டுள்ள மூன்று நாடுகளின் பணவீக்க விகிதங்களின் சராசரியை விட 1.5 சதவிகிதப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவை தாண்டக் கூடாது.
 
2. '''அரசின் நிதி நிலைமை'''
:அ. '''வருடாந்திர பற்றாக்குறை''' : ஒரு நாட்டின் வருடாந்திர பற்றாக்குறை [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யில் 3% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).
:ஆ. '''அரசின் கடன் சுமை''': ஒரு நாட்டின் கடன் சுமை [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யில் 60% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).
 
3. '''[[நாணய மாற்று வீதம்]]'''
[[யூரோ]] நாணய ஒன்றியத்தில் சேர விரும்பும் நாடுகள், அதற்கு முன்னர் குறைந்த பட்சம் இரு ஆண்டுகளுக்காவது ஈ. ஆர். எம். II. என்றழைக்கப்படும் ஐரோப்பிய நாணயமாற்று இயங்கமைப்பில் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அக்காலகட்டத்தில் அவை தமது நாணயங்களின் மதிப்பை குறைத்திருக்கக் கூடாது.
 
4. '''நீண்டகால வட்டி விகிதம்'''
ஒரு நாட்டின் நீண்டகால வட்டிவிகிதம் ஐ.ஓ நாடுகளில் குறைந்தபட்ச் பணவீக்கமுடைய மூன்று நாடுகளின் வட்டி விகிதத்தை விட 2 சதவிகிதப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவை தாண்டக் கூடாது.
 
[[1998]]ல் பதினோரு ஐ. ஓ நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சிபெற்றிருந்தன. இவை ஜனவரி 1, 1999 முதல் [[யூரோ]] பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் யூரோ பிரதேசம் உருவானது. பின்னர் [[கிரேக்கம்|கிரீஸ்]] 2000லும் [[சுலோவீனியா]] 2007லும், [[சைப்பிரஸ்]] மற்றும் [[மால்டா]] 2008லும் ஸ்லொவாக்கியா [[2009]]லும் தேர்ச்சிபெற்று யூரோ பிரதேசத்தில் இணைந்தன.
 
==விரிவாக்கம்==
==நிர்வாகம்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/594570" இருந்து மீள்விக்கப்பட்டது