அடையாளச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
பல்வேறு கண்டுபிடிபுக்களும், தொழில்நுட்பங்களும், அடையாளச் சின்னங்களின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றியுள்ளன. இவற்றுள் [[உருளை முத்திரை]]கள், [[நாணயம்|நாணயங்கள்]], [[படவெழுத்து]] மொழிகளின் பரவல், [[நீர்க்குறி]]கள், அச்சுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பன அடங்கும்.
 
18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, மேற்கத்திய சமூகங்களை [[வேளாண்மைச் சமூகம்|வேளாண்மைச் சமூக]] நிலையில் இருந்து, தொழிற் சமூக நிலைக்கு மாற்றியது. [[ஒளிப்படம்|ஒளிப்படமும்]], அச்சுத் தொழில்நுட்பமும், [[விளம்பரத்துறை]]யின் துரித வளர்ச்சிக்கு வித்திட்டன. எழுத்துருக்களையும், படங்களையும் ஒரே பக்கத்தில் இருக்கும்படி செய்யத்தக்க நிலையும் ஏற்பட்டது. எழுத்துருக்களில்கூடப் பல புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்தன. அவற்றின் வடிவம், வெளிப்படுத்தும் தன்மை என்பவற்றில் அக்காலத்தில் நூல்களை அச்சிடுவதற்காகப் புழக்கத்தில் இருந்த அடிப்படையான எழுத்துருக்களுக்கும் அப்பால், தடித்த எழுத்துருக்கள், அலங்கார எழுத்துருக்கள் போன்ற பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
 
கலைகளின் நோக்கங்களும் விரிவடைந்து வந்தன. வெளிப்படுத்தல், அழகூட்டல் என்பவற்றோடு கூடிய கலையம்சம் கொண்ட கதை சொல்லல் போன்ற நிலையில் இருந்து, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொருட்களையும் அவற்றின் வணிகத் தயாரிப்புக்களையும் வேறுபடுத்திக் காட்டும் ஒன்றாகவும் வளர்ச்சியடைந்தது.
 
[[பகுப்பு:சின்னங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அடையாளச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது