அடையாளச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, மேற்கத்திய சமூகங்களை [[வேளாண்மைச் சமூகம்|வேளாண்மைச் சமூக]] நிலையில் இருந்து, தொழிற் சமூக நிலைக்கு மாற்றியது. [[ஒளிப்படம்|ஒளிப்படமும்]], அச்சுத் தொழில்நுட்பமும், [[விளம்பரத்துறை]]யின் துரித வளர்ச்சிக்கு வித்திட்டன. எழுத்துருக்களையும், படங்களையும் ஒரே பக்கத்தில் இருக்கும்படி செய்யத்தக்க நிலையும் ஏற்பட்டது. எழுத்துருக்களில்கூடப் பல புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்தன. அவற்றின் வடிவம், வெளிப்படுத்தும் தன்மை என்பவற்றில் அக்காலத்தில் நூல்களை அச்சிடுவதற்காகப் புழக்கத்தில் இருந்த அடிப்படையான எழுத்துருக்களுக்கும் அப்பால், தடித்த எழுத்துருக்கள், அலங்கார எழுத்துருக்கள் போன்ற பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
 
 
கலைகளின் நோக்கங்களும் விரிவடைந்து வந்தன. வெளிப்படுத்தல், அழகூட்டல் என்பவற்றோடு கூடிய கலையம்சம் கொண்ட கதை சொல்லல் போன்ற நிலையில் இருந்து, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொருட்களையும் அவற்றின் வணிகத் தயாரிப்புக்களையும் வேறுபடுத்திக் காட்டும் ஒன்றாகவும் வளர்ச்சியடைந்தது. [[வணிகக் கலை]] தொடர்பான [[ஆலோசனை நிறுவனம்|ஆலோசனை நிறுவனங்களும்]], வணிகக் குழுக்களும் ஒழுங்கமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்து வந்தன. 1890 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் 8,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்த 700 [[கல்லச்சு]]முறை (lithography) அச்சகங்கள் இருந்தன. ஆக்கங்களுக்கான பெருமையும் தனிப்பட்ட கலைஞர்களுக்கு அன்றி அவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கே உரித்தாயின.
 
 
180 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் அச்சக நிறுவனமான ரூச்சன், 1850 ஆம் ஆண்டில் நியூ யார்க்கின் கோசேப் மோர்சு, 1870 ல் ப்ரான்சின் யோல்சு செரெட் இங்கிலாந்தின் பிரெடெரின் வாக்கர் போன்ற நிறுவனங்கள் காட்சிக் கலைகள், கல்லச்சு நுட்பம் என்பவற்றில் புத்தாக்கங்களைச் செய்தனர். இதன் மூலம் வண்ணப் படங்களை அச்சிடுவதில் பல முன்னேற்றங்கள் உருவாயின. அச்சுச் செலவு குறைந்து படிப்பறிவு வீதம் அதிகரித்ததுடன், காட்சிக்கலைகள் தொடர்பான பாணிகளும் மாற்றமடையலாயின. விக்டோரிய அழகூட்டல் கலைகள், வணிகச் சார்பான அச்செழுத்துப் பாணிகள், முறைகள் என்பவற்றையும் தழுவி விரிவடைந்தது.
 
[[பகுப்பு:சின்னங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அடையாளச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது