அடையாளச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
இன்று பல நிறுவனங்களும், உற்பத்திப் பொருட்களும், சேவை நிலையங்களும், முகவர் அமைப்புக்களும் படவுருக்களை (ideogram) அல்லது குறியீடுகளை அல்லது இரண்டும் கலந்த வடிவங்களைத் தமது அடையாளச் சின்னங்களாகப் பயன்படுத்துகின்றன. இதனால் சில அடையாளச் சின்னங்களையே மக்கள் அவற்றின் நிறுவனங்களுடன் அடையாளம் காண முடிகின்றது. தற்போது படவுருக்களையும், நிறுவனத்தின் பெயரையும் அடையாளச் சின்னங்களின் பயன்படுத்தும் போக்கும் காணப்படுகிறது. இதன் மூலம் அடையாளச் சின்னங்களை நிறுவனங்களுடன் அடையாளம் காண்பது இலகுவாகின்றது. பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்படும் அடையாளச் சின்னங்களும் காணப்படுகின்றன. இவற்றில் வழமையான எழுத்துருக்களையன்றிப் பெயரைத் தனித்துவமான வடிவமைப்புக்களுடன் கூடியனவாக எழுத்துக்களையும், குறிப்பிட்ட [[நிறம்|நிறங்கள்]], வரைபடக் கூறுகள் என்பவற்றையும் பயன்படுத்துவதன் மூலம் அமைக்கின்றனர்.
 
[[File:Coca-Cola logo.svg|200px|right|thumb|கொக்கா கோலாவின் அடையாளச் சின்னம். ஆங்கில எழுத்துக்களில் இருந்தாலும் அதன் நிறம் எழுத்து வடிவம் போன்றவற்றால் இலகுவாக அடையாளம் காணப்படுகிறது.]]
 
சில வேளைகளில் பெயர்களிலும் பார்க்கப் படவுருக்கள் கூடிய பொருத்தமானவையாக அமைகின்றன. பல்வேறு மொழிகளைப் பேசுவோர் அடையாளம் காணவேண்டிய நிலை இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மொழியைச் சார்ந்த எழுத்துக்கள் உகந்தவையாக இருக்காது. எடுத்துக்காட்டாக, அரபு மொழியில் அல்லது சீன மொழியில் எழுதப்பட்ட பெயர்கள் ஐரோப்பிய நாடுகளில் எவ்வித விளக்கத்தையும் ஏற்படுத்தா. படவுருக்கள் இவ்வாறான நிலைமைகளில் மிகவும் பொருத்தமானவையாக அமைகின்றன. அரசு சார்பற்ற நிறுவனங்களில், செஞ்சிலுவைச் சங்கம், செம்பிறைச் சங்கம் போன்றவற்றின் அடையாளச் சின்னங்கள் பெரும்பாலான நாடுகளிலும் பல்வேறு மொழிபேசுவோரிடமும் நன்று அறியப்பட்டவை. இதனால் இத்தகைய அடையாளச் சின்னங்களில் பெயர் எழுது அவசியம் கிடையாது. ஒரு மொழியில் எழுதப்பட்டாலும் கூட பயன்ய்படுத்தப்பட்ட நிறம், எழுத்தின் வடிவம் போன்ற கூறுகள் சில அடையாளச் சின்னங்களுக்குப் பரப்வலான அறிமுகத்தை உருவாக்கிக் கொடுக்கின்றன. கொக்கா கோலாவின் அடையாளச் சின்னம் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/அடையாளச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது